சினிமா

தமிழ் ராக்கர்ஸுக்கு வேண்டுகோள் விடுத்த விக்னேஷ் சிவன்

Published On 2018-01-16 10:17 GMT   |   Update On 2018-01-16 10:17 GMT
சூர்யா, கீர்த்தி சுரேஷ், கார்த்தி, செந்தில் ஆகியோரை வைத்து ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன், தமிழ் ராக்கர்ஸ் டீமுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதிய படங்கள் வெளியாகும் அதே நாளில் இணையதளத்தில் திருட்டுத்தனமாக அந்த படங்களை வெளியிடும் வழக்கம் தொடர்கதையாகி வருகிறது. இதனால் ரசிகர்கள் தியேட்டருக்கு செல்வது குறைகிறது. படத்தயாரிப்பாளர்கள் பெருமளவில் பாதிக்கப்படுகிறார்கள். இதை தடுக்க விஷால் பல்வேறு முயற்சிகளை எடுத்தார். என்றாலும், அதற்கு பலன் கிடைக்கவில்லை.


இந்த நிலையில், பொங்கலை யொட்டி வெளியான ‘தானா சேர்ந்த கூட்டம்’, ‘ஸ்கெட்ச்’, ‘குலேபகாவலி’ படங்கள் திரைக்கு வரும் போதே இணைய தளங்களிலும் திருட்டுத்தனமாக வெளியாகி விட்டது.


இதையடுத்து, ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன், இந்த படங்களை திருட்டுதனமாக வெளியிட்ட தமிழ் ராக்காஸ் இணையதளத்துக்கு விடுத்துள்ள வேண்டுகோளில் இப்படி கூறியுள்ளார்....


“தமிழ் ராக்கர்ஸ் டீம், பிளீஸ் உங்களுக்கு இதயம் இருந்தால் இதை செய்யலாமா? இதற்காகத்தான் கடுமையாக உழைத்திருக்கிறோம். பல திரை உலக பிரச்சினைகள், வரி பிரச்சினைகள் ஆகியவற்றை கடந்து தான் படங்கள் வெளியாகி உள்ளன. எனவே, ‘தானா சேர்ந்த கூட்டம்’, ‘ஸ்கெட்ச்’, குலேபகாவலி’ படங்களுக்கு இதை செய்யாதீர்கள்.


இணையதளங்களில் புதிய படங்கள் அன்றைய தினமே வெளியாவதை இன்னும் தடுக்க முடியவில்லை. எனவே, தமிழ் திரை உலகம் அதிர்ச்சியில் உள்ளது.

Tags:    

Similar News