சினிமா

சினிமாவில் நடிக்க திட்டமா? சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் மறுப்பு

Published On 2017-04-15 19:13 IST   |   Update On 2017-04-15 19:18:00 IST
சினிமாவில் நடிக்கும் எண்ணம் ஏதும் இல்லை என சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்ப்போம்.
சரவணா ஸ்டோர் விளம்பரங்களில் தோன்றிய அந்நிறுவனத்தின் உரிமையாளர் சரவணன் சினிமாவில் நயன்தாராவுடன் இணைந்து நடிக்க இருப்பதாக இணையதளங்களில் செய்திகள் வெளியாகின. இந்த செய்தி வைரலாக பரவிய நிலையில், சரவணா ஸ்டோர்ஸ் நிர்வாகத்திடம் இதுபற்றி விசாரித்த போது, இணையதளங்களில் வெளியான தகவலை அவர்கள் மறுத்துள்ளனர்.

மேலும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இல்லை என்றும் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News