சினிமா

சிம்புவின் அச்சம் என்பது மடமையடா ரிலீஸ் தேதி அறிவிப்பு

Published On 2016-10-30 13:48 IST   |   Update On 2016-10-30 13:48:00 IST
சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர். அது என்னவென்பதை கீழே பார்ப்போம்...
சிம்பு நடிப்பில் நீண்டகாலமாக உருவாகி வரும் படம் ‘அச்சம் என்பது மடமையடா’. ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்திற்கு பிறகு சிம்பு-கவுதம் வாசுதேவ் மேனன் இருவரும் இணைந்திருக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். மஞ்சிமா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இப்படத்தின் டீசர், டிரைலர், பாடல்கள் எல்லாம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், படம் எப்போது வெளியாகும் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில், தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதியை இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் வெளியிட்டுள்ளார்.

அதன்படி, வருகிற நவம்பர் 11-ந் தேதி ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தை வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர். இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சிம்புவுக்கு இந்த வருடம் ஏற்கெனவே ‘இது நம்ம ஆளு’ படம் வெளிவந்துள்ளது. தற்போது இந்த வருடம் அவரது கணக்கில் மேலும் ஒன்று இணைந்துள்ளது. 

Similar News