இது புதுசு

விரைவில் இந்தியா வரும் அபாச்சி RTR 310 - இணையத்தில் லீக் ஆன தகவல்

Published On 2023-02-07 17:17 IST   |   Update On 2023-02-07 17:17:00 IST
  • டிவிஎஸ் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய ஃபிளாக்ஷிப் மோட்டார்சைக்கிள் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.
  • புதிய டிவிஎஸ் மோட்டார்சைக்கிள் பிஎம்டபிள்யூ G310 R மாடலை தழுவி உருவாக்கப்படுவதாக தகவல்.

டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம் விரைவில் முற்றிலும் புதிய ஃபிளாக்ஷிப் மோட்டார்சைக்கிளை இம்மாத இறுதியில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய மோட்டார்சைக்கிள் அபாச்சி RTR 310 பெயரில் அறிமுகமாகும் என்றும் இது பிஎம்டபிள்யூ மோட்டராட் நிறுவனத்தின் G310 R மாடலை தழுவி உருவாக்கப்படுகிறது என கூறப்படுகிறது.

இந்திய சந்தையில் புதிய டிவிஎஸ் அபாச்சி RTR 310 விலை ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. புதிய RTR 310 மாடலில் அபாச்சி RR 310 பைக்கில் உள்ளதை போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் அபாச்சி RR 310 மாடலை சார்ந்து உருவாக்கப்பட்ட G310 RR பைக்கை பிஎம்டபிள்யூ அறிமுகம் செய்தது.

ஜெர்மனியை சேர்ந்த பிஎம்பிள்யூ நிறுவனத்திற்கு அதிக விற்பனையை ஈட்டித் தரும் மாடலாக RR-310 சார்ந்த பிஎம்பிள்யூ G310 RR உள்ளது. இந்தியா மட்டுமின்றி சர்வதேச சந்தைக்கும் இந்த மோட்டார்சைக்கிள் ஓசூரில் உள்ள டிவிஎஸ் உற்பத்தி ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது.

புதிய டிவிஎஸ் அபாச்சி RTR 310 மாடலின் விலை RR 310-ஐ விட ரூ. 15 ஆயிரத்தில் இருந்து ரூ. 20 ஆயிரம் வரை குறைவாகவே நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. டிவிஎஸ் அபாச்சி RTR 310 மாடலில் கிடைமட்டமாக பொருத்தப்பட்ட TFT இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், பல்வேறு ரைடிங் மோட்கள் வழங்கப்படுகிறது. செயல்திறனை பொருத்தவரை 312சிசி சிங்கில் சிலிண்டர் லிக்விட் கூல்டு ஃபியூவல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட யூனிட் வழங்கப்படுகிறது.

இந்த என்ஜின் 34 பிஎஸ் பவர், 27 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன், ஸ்லிப்பர் மற்றும் அசிஸ்ட் கிளட்ச், அட்ஜஸ்ட் செய்யக்கூடிய கிளட்ச் மற்றும் பிரேக் லீவர்கள், அப்சைடு டவுன் ஃபோர்க்குகள், பிரீ-லோட் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக் சஸ்பென்ஷன், டூயல் சேனல் ஏபிஎஸ் உள்ளிட்டவை ஸ்டாண்டர்டு அம்சங்களாக வழங்கப்படலாம்.

Photo Courtesy: GaadiWaadi

Tags:    

Similar News