இது புதுசு

இணையத்தில் லீக் ஆன ராயல் என்பீல்டு எலெக்ட்ரிக் பைக் புகைப்படங்கள்

Published On 2022-11-23 10:42 GMT   |   Update On 2022-11-23 10:42 GMT
  • ராயல் என்பீல்டு நிறுவனம் சமீபத்தில் தான் சூப்பர் மீடியோர் 650 மோட்டார்சைக்கிளை இந்தியாவில் காட்சிப்படுத்தியது.
  • விரைவில் முற்றிலும் புதிய புல்லட் மோட்டார்சைக்கிளை மேம்பட்ட அம்சங்களுடன் ராயல் என்பீல்டு அறிமுகம் செய்ய இருக்கிறது.

உலக சந்தையில் முன்னணி ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் எலெக்ட்ரிக் வாகன பிரிவில் கவனம் செலுத்த துவங்கி விட்டன. பல்வேறு நிறுவனங்கள் ஏற்கனவே எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய துவங்கி விட்டது. இந்த நிலையில், ராயல் என்பீல்டு நிறுவனமும் எலெக்ட்ரிக் வாகன துறையில் களமிறங்க திட்டமிட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகனம் பற்றிய விவரங்கள் அதிகளவில் வெளியாகவில்லை. எனினும், ராயல் என்பீல்டு நிறுவனத்தின் முதல் எலெகட்ரிக் மோட்டார்சைக்கிள் கான்செப்ட் எப்படி இருக்கும் என்ற விவரங்கள் ஆன்லைனில் லீக் ஆகி இருக்கிறது. இதில் புதிய எலெக்ட்ரிக் பைக் எவ்வாறு காட்சியளிக்கும் என ஓரளவுக்கு தெரிகிறது. மேலும் இந்த மாடல் "எலெக்ட்ரிக்01" எனும் பெயரில் அறிமுகமாகும் என்றும் கூறப்படுகிறது.

தோற்றத்தில் ராயல் என்பீல்டு எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் கான்செப்ட் நியோ விண்டேஜ் தீம் சார்ந்த டிசைன் கொண்டிருக்கிறது. இதன் ஸ்டைலிங்கில் நீண்ட, மெல்லிய ஸ்லெண்டர் ஃபியூவல் டேன்க் போன்ற வடிவம், முன்புற சஸ்பென்ஷன் கிர்டர் ஃபோர்க்குகள் போன்று காட்சியளிக்கிறது. இத்துடன் அலாய் வீல்கள் நவீன தோற்றம் கொண்டிருக்கின்றன. இந்த பைக்கின் ஃபிரேம் டேன்க் மீது நீள்கிறது.

இதன் முகப்பு பகுதியில் ரெட்ரோ தோற்றத்திலான வட்ட வடிவம் கொண்ட ஹெட்லேம்ப், எல்இடி லைட்டிங் கொண்டிருக்கும் என தெரிகிறது. எலெக்ட்ரிக் வாகனங்களுக்காக ராயல் என்பீல்டு நிறுவனம் புதிய பிராண்டு உருவாக்கும் என்றும் இதன் முதல் எலெக்ட்ரிக் வாகனம் 2025 வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக்கில் உள்ள பேட்டரி பேக் ஆல்-பிளாக் ஹவுசிங் மூலம் மறைக்கப்பட்டு இருக்கிறது.

Photo Courtesy; AutoCar

Tags:    

Similar News