இது புதுசு

மைக்ரோ எலெக்ட்ரிக் எஸ்யுவி கான்செப்ட் அறிமுகம் செய்த எம்ஜி மோட்டார்ஸ்

Published On 2022-09-30 10:09 GMT   |   Update On 2022-09-30 10:09 GMT
  • எம்ஜி மோட்டார் நிறுவனம் பல்வேறு எலெக்ட்ரிக் கார் மாடல்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
  • விரைவில் வெளியிட இருக்கும் மைக்ரோ எலெக்ட்ரிக் எஸ்யுவி காரின் கான்செப்ட்-ஐ எம்ஜி மோட்டார்ஸ் அறிமுகம் செய்துள்ளது.

ப்ரிட்டனை சேர்ந்த முன்னணி கார் உற்பத்தியாளர் எம்ஜி மோட்டார்ஸ்-இன் கிளை நிறுவனமான பௌஜூன் புதிதாக மைக்ரோ எலெக்ட்ரிக் எஸ்யுவி கான்செப்ட்-ஐ அறிமுகம் செய்து இருக்கிறது. தற்போது சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், இதே மாடல் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். இந்தியாவில் இந்த கார் எம்ஜி பிராண்டிங்கில் அறிமுகமாகும் என தெரிகிறது.

சீனாவில் அறிமுகமாகி இருக்கும் ஆல்-எலெக்ட்ரிக் மைக்ரோ எஸ்யுவி கான்செப்ட் பிரபல எஸ்யுவி மாடல்களை விட வித்தியாசமாக காட்சியளிக்கிறது. இந்த கான்செப்ட் ஒட்டுமொத்த தோற்றம் சுசுகி ஜிம்னி, போர்டு பிரான்கோ மற்றும் டொயோட்டாவின் எப்ஜெ குரூயிசர் மாடல்களை போன்றே காட்சியளிக்கிறது. எனினும், இதன் வெளிப்புறம் எதிர்கால டிசைன் அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

காரின் வெளிப்புறம் டூயல் டோன் நிறங்கள், நான்கு ஸ்ட்ரிப்கள் அடங்கிய எல்இடி டே-டைம் ரன்னிங் லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் ரக்கட் பாடிவொர்க், முன்புறம் இரண்டு டோயிங் ஹூக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த காரில் மொத்தத்தில் இரண்டு கதவுகளே வழங்கப்படுகின்றன. இதன் மூலம் காரின் விலையை குறைவாக நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது.

முன்னதாக இந்த ஆண்டு ஜூன் மாத வாக்கில் எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் வாகன சோதனை இந்திய சாலைகளில் நடைபெற்றது. இந்த கார் E230 எனும் குறியீட்டு பெயர் கொண்டிருக்கிறது. இது வுலிங் ஏர் எலெக்ட்ரிக் வாகனத்தை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. வுலிங் என்பதும் எம்ஜி நிறுவனத்தின் துணை பிராண்டு ஆகும். வுலிங் பிராண்டின் ஏர் மாடல் சமீபத்தில் தான் இந்தோனேசிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

Tags:    

Similar News