இது புதுசு

லம்போர்கினி உருஸ் புது வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம் - விலை எவ்வளவு தெரியுமா?

Published On 2022-11-25 10:49 GMT   |   Update On 2022-11-25 10:49 GMT
  • லம்போர்கினி நிறுவனத்தின் உருஸ் ஸ்டாண்டர்டு மாடலை விட புது வேரியண்ட் அதிக ஸ்போர்ட் தோற்றம் கொண்டுள்ளது.
  • இதில் உள்ள என்ஜின் 16 ஹெச்பி வரை அதிக செயல்திறன் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

லம்போர்கினி உருஸ் பெர்ஃபார்மண்ட் மாடல் இந்திய சந்தையில் அறிமுகமாகி இருக்கிறது. புதிய உருஸ் மாடலின் விலை ரூ. 4 கோடியே 22 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. முன்னதாக ஆகஸ்ட் மாத வாக்கில் இந்த மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது. புதிய உருஸ் மாடலின் வெளிப்புற டிசைன், இண்டீரியர் மற்றும் மெக்கானிக்கல் அம்சங்களில் அதிக மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2023 லம்போர்கினி உருஸ் பெர்ஃபார்மண்ட் மாடலில் 4.0 லிட்டர் ட்வின் டர்போ வி8 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 666 ஹெச்பி பவர், 850 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 7 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 3.3 நொடிகளில் எட்டிவிடும். மேலும் மணிக்கு அதிகபட்சம் 306 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.

மெக்கானிக்கல் அப்கிரேடுகளை பொருத்தவரை இந்த மாடலில் புதிய ஸ்டீல் ஸ்ப்ரிங்குகள் வழங்கப்பட்டுள்ளன. இவை காரின் சஸ்பென்ஷனை 20 மில்லிமீட்டர் வரை குறைத்துள்ளன. இத்துடன் ட்வீக் செய்யப்பட்ட ஸ்டீரிங் சிஸ்டம், ரேலி டிரைவ் மோட், அக்ரபோவிக் எக்சாஸ்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

டிசைனை பொருத்தவரை லம்போர்கினி உருஸ் பெர்ஃபார்மண்ட் மாடலில் புதிய பம்ப்பர்கள், பிளாக்டு-அவுட் ஏர் டேம், 22 இன்ச் அலாய் வீல்கள், ஸ்பாயிலர், ஏர் கர்டெயின்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்திய சந்தையில் புதிய உருஸ் பெர்ஃபார்மண்ட் மாடல் ஆஸ்டன் மார்டின் DBX 707, போர்ஷே கயென் கூப் டர்போ GT மற்றும் மசிராட்டு லெவாண்ட் ட்ரோஃபியோ போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

Tags:    

Similar News