இது புதுசு

கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் இந்திய வெளியீட்டு விவரம்

Published On 2023-02-04 18:12 IST   |   Update On 2023-02-04 18:12:00 IST
  • கியா நிறுவனத்தின் செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் ADAS தொழில்நுட்பம் வழங்கப்படும் என தகவல்.
  • கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம்.

கியா செல்டோஸ் எஸ்யுவி மாடல் விரைவில் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட இருக்கிறது. இந்திய சந்தையில் இந்த ஆண்டு மத்தியில் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. முன்னதாக 2022 ஜூன் மாத வாக்கில் கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. வெளியீட்டிற்கு முன் இந்த கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் படங்கள் வெளியாகி வருகின்றன.

புதிய கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 160 ஹெச்பி பவர், 253 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. தற்போது விற்பனை செய்யப்படும் மாடலில் உள்ள 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் 140 ஹெச்பி பவர், 242 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 7 ஸ்பீடு டிசிடி, 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.

ஃபேஸ்லிஃப்ட் மாடல் என்ற வகையில், செல்டோஸ் மாடலில் ரிடிசைன் செய்யப்பட்ட கிரில், முன்புற ஹெட்லேம்ப்கள், எல்இடி டேடைம் ரன்னிங் லைட்கள் வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் அலாய் வீல்களில் புது டிசைனை எதிர்பார்க்கலாம். காரின் பின்புறம் டெயில் லேம்ப் மற்றும் எல்இடி லைட் பார் ஒன்றாக இணைக்கப்பட்டு இருக்கும் என்றும் இதன் மத்தியில் கியா பேட்ஜ் இடம்பெற்று இருக்கும் என தெரிகிறது.

இந்திய சந்தையில் கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் டொயோட்டா அர்பன் குரூயிசர் ஹைரைடர், மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா மற்றும் ஹூண்டாய் கிரெட்டா போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

Tags:    

Similar News