இது புதுசு

டிரைவர் சீட்டே இல்லை.. விரைவில் பயன்பாட்டுக்கு வரும் தானியங்கி கால் டாக்சி..

Published On 2023-11-04 10:32 GMT   |   Update On 2023-11-04 10:32 GMT
  • தானியங்கி வாகனங்கள் மூலம் கால் டாக்சி சேவை வழங்கப்பட இருக்கிறது.
  • தானியங்கி வாகனத்தில் ஓட்டுனர் யாரும் இருக்க மாட்டார்கள்.

ஹோண்டா, ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் குரூயிஸ் நிறுவனங்கள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. இந்த ஒப்பந்தத்தின் படி மூன்று நிறுவனங்கள் ஒன்றிணைந்து புதிய நிறுவனம் ஒன்றை துவங்க உள்ளன. இந்த புதிய நிறுவனம் 2026 ஆண்டு துவக்கத்தில் ஜப்பான் நாட்டில் தானியங்கி வாகனங்கள் மூலம் கால் டாக்சி சேவையை வழங்க இருக்கிறது.

புதுவித கால் டாக்சி சேவையில் மூன்று நிறுவனங்கள் இணைந்து உருவாக்கிய குரூயிஸ் ஒரிஜின் எனும் தானியங்கி வாகனம் வாடிக்கையாளர்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு சேர்க்க இருக்கிறது. இந்த தானியங்கி வாகனத்தில் குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாக, அதில் ஓட்டுனர் யாரும் இருக்க மாட்டார்கள் என்பது தான்.

இந்த கால் டாக்சி சேவையினை வாடிக்கையாளர்கள் ஆப் மூலம் புக் செய்து பயன்படுத்தலாம். இதற்கான பிரத்யேக செயலியில் வாகனத்தை புக் செய்வதில் இருந்து பயணித்த பிறகு செலுத்த வேண்டிய கட்டணம் என எல்லாவற்றையும் மேற்கொள்ள முடியும். குரூயிஸ் ஒரிஜின் மாடலில் ஸ்டீரிங் வீல் மற்றும் ஓட்டுனர் இருக்கை என எதுவும் இடம்பெற்று இருக்காது.

குரூயிஸ் ஒரிஜின் வாகனத்தில் அதிகபட்சம் ஆறு பேர் வரை பயணிக்க முடியும். முதற்கட்டமாக மத்திய டோக்கியோவில் இந்த சேவை பயன்பாட்டுக்கு வரவிருக்கிறது. அதன்பிறகு மேலும் பல்வேறு பகுதிகளில் படிப்படியாக இந்த சேவையை பொதுமக்கள் பயன்படுத்த முடியும் என்று எதிர்பார்க்கலாம்.

Tags:    

Similar News