இது புதுசு

ஹோண்டாவின் புதிய இ கிளட்ச் தொழில்நுட்பம் அறிமுகம் - எதற்கு தெரியுமா?

Published On 2023-10-12 09:40 GMT   |   Update On 2023-10-12 09:40 GMT
  • பைக் ஓட்டும் போதே இயக்கக்கூடிய வகையில், கிளட்ச் லீவர் வழங்கப்பட்டு இருக்கிறது.
  • டிரைவிங் ஃபோர்ஸ்-க்கு ஏற்ற வகையில் சிறப்பான கிளட்ச் கண்ட்ரோல் வசதியை வழங்குகிறது.

ஹோண்டா நிறுவனம் மோட்டார்சைக்கிள்களில் பயன்படுத்துவதற்காக முற்றிலும் புதிய இ கிளட்ச் தொழில்நுட்பத்தை உருவாக்கி இருப்பதாக அறிவித்து உள்ளது. உலகில் இதுபோன்ற தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்படுவது இதுவே முதல் முறை என்று ஹோண்டா நிறுவனம் மேலும் தெரிவித்தது.

புதிய இ கிளட்ச் தொழில்நுட்பம் எலெக்டிரானிக் கண்ட்ரோல் தொழில்நுட்பம் மூலம் டிரைவிங் ஃபோர்ஸ்-க்கு ஏற்ற வகையில் சிறப்பான கிளட்ச் கண்ட்ரோல் வசதியை சீராக வழங்குகிறது. மோட்டார்சைக்கிளை ஸ்டார்ட் செய்து, கியரை மாற்றுவது மற்றும் வாகனத்தை நிறுத்துவது என்று துவக்கம் முதல் இறுதிவரை இவை செயல்படும்.

மேலும் பைக் ஓட்டும் போதே இயக்கக்கூடிய வகையில், கிளட்ச் லீவர் ஒன்றும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த தொழில்நுட்பம் மூலம் மோட்டார்சைக்கிளை இயக்கும் முறையில் கவனம் செலுத்துவதை விட, வாகனம் ஓட்டுவதில் மகிழ்ச்சியை உணர முடியும்.

மிக குறைந்த எடை கொண்டிருக்கும் புதிய இ கிளட்ச் தொழில்நுட்பம் ஏற்கனவே உள்ள என்ஜின் லே-அவுட்களில் இன்ஸ்டால் செய்ய முடியும். காலப்போக்கில் தனது மோட்டார்சைக்கிள்கள் அனைத்திலும் இந்த தொழில்நுட்பத்தை இன்ஸ்டால் செய்ய ஹோண்டா நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.

Tags:    

Similar News