எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட ஹோண்டா அட்வென்ச்சர் பைக்
- ஹோண்டா நிறுவனத்தின் புதிய அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் உயரமான ஸ்டான்ஸ் கொண்டிருக்கிறது.
- புது ஹோண்டா பைக் எண்ட்ரி லெவல் அட்வென்ச்சர் பிரிவில் விற்பனைக்கு நிலை நிறுத்தப்பட இருக்கிறது.
ஹோண்டா நிறுவனம் தனது ஹோண்டா XRE300 அட்வென்ச்சர் மோட்டார்சைககிளை ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் காட்சிக்கு வைத்தது. கடந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் நடைபெற்ற பென்ச்மார்க்கிங்கின் போது இந்த மாடல் கேடிஎம் 390 அட்வென்ச்சர் மற்றும் பிஎம்டபிள்யூ G310GS போன்ற மாடல்களுடன் காட்சியளித்தது குறிப்பிடத்தக்கது.
புதிய ஹோண்டா XRE300 அட்வென்ச்சர் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்றே தெரிகிறது. அறிமுகமாகும் பட்சத்தில் இந்திய சந்தையில் இது ஹோண்டா நிறுவனத்தின் எண்ட்ரி லெவல் அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளாக நிலை நிறுத்தப்படலாம். இந்தியாவில் எண்ட்ரி லெவல் அட்வென்ச்சர் பிரிவு தொடர்ந்து வளர்ந்து வருகிறது. இந்த பிரிவில் ஹோண்டா ஏற்கனவே XRE300 மாடலை இந்தியாவில் டிரேட்மார்க் செய்து இருக்கிறது.
டூயல் ஸ்போர்ட் பைக் என்ற வகையில், ஹோண்டா XRE300 மாடல் ரோடு-சார்ந்த மாடல்களான கேடிஎம் 390 அட்வென்ச்சர் மற்றும் பிஎம்டபிள்யூ G310GS போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும். எனினும், இந்த பைக் உயரமான ஸ்டான்ஸ் கொண்டிருக்கிறது. இதன் முன்புற ஃபேரிங் தவிர மோட்டார்சைக்கிள் ஒட்டுமொத்த தோற்றம் மெல்லியதாகவே காட்சியளிக்கிறது.
புதிய ஹோண்டா XRE300 மாடலில் ஃபுல் எல்இடி லைட்டிங், உரமான ஃபெண்டர் பீக், அசத்தலான ஹெட்லேம்ப் கவுல், ஸ்கல்ப்ட் செய்யப்பட்ட ஃபியூவல் டேன்க், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், அண்டர்சீட் எக்சாஸ்ட் மற்றும் லக்கேஜ் ராக் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.
ஏற்கனவே பிரேசில் நாட்டில் விற்பனை செய்யப்படும் நிலையில், ஹோண்டா XRE300 மாடல் 291.6சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த என்ஜின் ஃபிலெக்ஸ் ஃபியூவல் யூனிட் ஆகும். இது பெட்ரோல் மற்றும் எத்தனால் உள்ளிட்டவைகளில் இயங்கும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.
பெட்ரோலில் இயங்கும் போது இந்த யூனிட் 25.4 ஹெச்பி பவர், 27.6 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. எத்தனாலில் இயங்கும் போது இந்த என்ஜின் 25.6 ஹெச்பி பவர், 28 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.
Photo Courtesy: Motorbeam