இது புதுசு

இரண்டு எலெக்ட்ரிக் வாகனங்களை உருவாக்கும் இந்துஸ்தான் மோட்டார்ஸ்

Published On 2022-07-04 06:43 GMT   |   Update On 2022-07-04 06:43 GMT
  • இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் தான் பிரபல அம்பாசடர் மாடல்களை விற்பனை செய்து வந்தது.
  • இந்த நிறுவனம் மீண்டும் சந்தையில் களமிறங்க இருக்கிறது.

இந்திய சந்தையில் அதிக பிரபலமாக இருந்த அம்பாசடர் மாடல்களை விற்பனை செய்து வந்த இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் மீண்டும் சந்தையில் களமிறங்க இருக்கிறது. இந்த நிறுவனம் அடுத்த ஆண்டு புது எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதற்காக இந்துஸ்தான் மோட்டார் நிறுவனம் ஐரோப்பிய நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து இருக்கிறது.

எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி துவங்கும் போது இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் சுமார் 400 ஊழியர்களை பணி அமர்த்த முடிவு செய்து உள்ளது. தற்போது இரு நிறுவனங்கள் இணைந்து நிதி சார்ந்த திட்டமிடல்களை மேற்கொண்டு வருகின்றன. இந்த பணிகள் நிறைவு பெற இரண்டு மாதங்கள் ஆகும்.


இதைத் தொடர்ந்து இரண்டு நிறுவனங்களும் இணைந்து முதலீட்டை ஈர்ப்பது, புது நிறுவனத்தை துவங்குவது என பல்வேறு விஷயங்களை மேற்கொள்ள இருக்கிறது. இது சார்ந்த பணிகள் அனைத்தும் அடுத்த ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி வாக்கில் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெற்றிகரமாக கூட்டணி அமைத்த பின் திட்டத்தின் முதற்கட்ட பணிகளை மேற்கொள்ள மேலும் இரண்டு காலாண்டுகளே தேவைப்படும்.

அந்த வகையில் இந்துஸ்தான் மோட்டார்ஸ் மற்றும் ஐரோப்பிய நிறுவன கூட்டணியில் முதல் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனம் அடுத்த நிதியாண்டின் இறுதியில் அறிமுகம் செய்யப்படலாம்.

Tags:    

Similar News