இது புதுசு

888 ஹெச்பி பவர் கொண்ட பிராபஸ் P 900 ராக்கெட் எடிஷன் அறிமுகம்

Update: 2022-09-27 11:01 GMT
  • பிராபஸ் நிறுவனத்தின் புதிய P 900 ராக்கெட் எடிஷன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
  • இந்த கார் மொத்தத்தில் பத்து யூனிட்கள் தான் உற்பத்தி செய்யப்பட உள்ளது.

ஜெர்மன் நாட்டு டியூனிங் நிறுவனமான பிராபஸ் P 900 ராக்கெட் எடிஷன் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. பிராபஸ் P 900 ராக்கெட் எடிஷன் பிக்கப் டிரக் ஒட்டுமொத்தத்தில் பத்து யூனிட்கள் தான் உற்பத்தி செய்யப்பட உள்ளது.

பிராபஸ் P 900 ராக்கெட் எடிஷன் ஜெர்மன் நாட்டை சேர்ந்த டியூனிங் நிறுவனமான பாங்கர்ஸ் 800 அட்வென்ச்சர் XLP பிக்கப் டிரக்-ஐ தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய P 900 ராக்கெட் எடிஷன் மாடல் அட்வென்ச்சர் ரக XLP மாடல்களின் பிக்கப் பாடி கொண்டிருக்கின்றன. இத்துடன் 900 ராக்கெட் எஸ்யுவியின் சேசிஸ் மற்றும் பவர்டிரெயின் பயன்படுத்தப்பட்டு உள்ளது.

புதிய P 900 ராக்கெட் எடிஷன் பிக்கப் டிரக்-இலும் 4.5 லிட்டர் ட்வின் டர்போ பிராபஸ் வி8 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இதனை உருவாக்க 4.0 லிட்டர் ட்வின் டர்போ AMG வி8 பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்த என்ஜினுடன் பெரிய டர்போ சார்ஜர்கள், பில்லட் கிரான்க்‌ஷாப்ட், போர்ஜ் செய்யப்பட்ட பிஸ்டன்கள், போர்ஜ் செய்யப்பட்ட கனெக்டிங் ராட்கள், பூஸ்ட்எக்ஸ்டிரா வால்வுகள், ஹை-பிரெஷர் பம்ப்கள், ரேம்-ஏர் இன்டேக் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

இத்தனை மாற்றங்கள் செய்யப்பட்ட என்ஜின் 4470சிசி திறன் கொண்டுள்ளது. இந்த என்ஜின் 888 ஹெச்பி பவர், 1250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 9 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் மற்றும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய பிராபஸ் P900 ராக்கெட் எடிஷன் ஒட்டுமொத்த எடை 2720 கிலோ ஆகும். இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 3.7 நொடிகளில் எட்டிவிடும். மேலும் மணிக்கு அதிகபட்சம் 280 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.

Tags:    

Similar News