இது புதுசு

ஏத்தர் 450X வெளியீட்டு தேதி - இணையத்தில் லீக் ஆன தகவல்!

Published On 2022-07-06 05:58 GMT   |   Update On 2022-07-06 05:58 GMT
  • ஏத்தர் எனர்ஜி நிறுவனம் புதிய ஏத்தர் 450X பேஸ்லிப்ட் மாடலை உருவாக்கி வருகிறது.
  • தற்போதைய ஏத்தர் 450X முழு சார்ஜ் செய்தால் 116 கி.மீ ரேன்ஜ் வழங்குகிறது.

பெங்களூரை சேர்ந்த ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தனது ஃபிளாக்‌ஷிப் 450X எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேஸ்லிப்ட் மாடலை ஜூலை 11 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மாடலில் பெரிய பேட்டரி மற்றும் அதிக செயல்திறன் வழங்கப்படும் என தெரிகிறது.

தற்போது விற்பனை செய்யப்படும் ஏத்தர் ஸ்கூட்டரின் விலை ரூ. 1 லட்சத்து 38 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்கூட்டரில் 2.9 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு உள்ளது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 116 கிமீ வரையிலான ரேன்ஜ் வழங்கும்.


புதிய ஏத்தர் 450X பேஸ்லிப்ட் மாடலில் 3.66 கிலோ வாட் ஹவர் லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதில் 3 பேஸ் பெர்மணன்ட் மேக்னெட் சின்க்ரோனஸ் எலெக்ட்ரிக் மோட்டார் சிஸ்டம் வழங்கப்படலாம். இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 146 கி.மீ. வரையிலான ரேன்ஜ் வழங்கும் என கூறப்படுகிறது.

அம்சங்களை பொருத்தவரை ஏத்தர் 450X பேஸ்லிப்ட் மாடலில் ராப் மோட், ஸ்போர்ட் மோட், ரைடு மோட், ஸ்மார்ட் ஈகோ மோட் மற்றும் ஈகோ மோட் என ஏராளமான டிரைவிங் மோட்கள் வழங்கப்படலாம். இதன் ராப் மோட் ஓலா S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு போட்டியாக அறிமுகம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

Similar News