இது புதுசு

பேரு மட்டும்தான் மினி.. பவர்ஃபுல் என்ஜினுடன் அறிமுகமான 2025 கண்ட்ரிமேன்..

Published On 2023-11-24 07:33 GMT   |   Update On 2023-11-24 07:33 GMT
  • புதிய கண்ட்ரிமேன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
  • புதிய மினி கண்ட்ரிமேன் மாடல் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

சர்வதேச ஆட்டோமொபைல் சந்தையில் அளவில் சிறிய கார்களை உற்பத்தி செய்வதில் உலகம் முழுக்க தனக்கென வாடிக்கையாளர்களை கொண்டிருக்கும் பிராண்டாக மினி அறியப்படுகிறது. குட்டி கார் என்ற போதிலும், பெரும்பாலானோரை கவரும் வகையிலான டிசைன், ஃபிளாக்ஷிப் தர உற்பத்தி மற்றும் சக்திவாய்ந்த என்ஜின் என மினி கார்களில் அனைத்து அம்சங்களும் சிறப்பானதாகவே இருந்து வந்துள்ளன.

அந்த வரிசையில், மினி பிராண்டின் முற்றிலும் புதிய கண்ட்ரிமேன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய 2025 மினி கண்ட்ரிமேன் மாடல், இதுவரை வெளியானதிலேயே மிகப்பெரிய மினி கார் ஆகும். அளவில் பெரிய கண்ட்ரிமேன் மாடலில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன.

புதிய மினி கண்ட்ரிமேன் மாடல் S All4 மற்றும் JCW என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் S All4 வேரியண்டில் 2.0 லிட்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 241 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இதன் JCW வேரியண்டில் 312 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும் என்ஜின் வழங்கப்படுகிறது.

2025 மினி கண்ட்ரிமேன் மாடலின் உற்பத்தி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் துவங்கும் என்று தெரிகிறது. இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் மாடல்கள் 2024 மே மாதம் விற்பனை மையங்களை வந்தடையும் என்று கூறப்படுகிறது. இந்த கார் வெளியீட்டின் போதே All4 மற்றும் JCW என இரண்டு வேரியண்ட்களும் கிடைக்கும். இதே காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் அடுத்த ஆண்டு செப்டம்பர் முதல் நவம்பர் மாதத்திற்குள் அறிமுகம் செய்யப்படலாம்.

Tags:    

Similar News