இது புதுசு

வேற லெவல் அப்டேட்கள்.. ரூ.1.20 கோடியில் புதிய வெல்ஃபயர் மாடலை அறிமுகம் செய்த டொயோட்டா!

Published On 2023-08-03 11:48 GMT   |   Update On 2023-08-03 11:48 GMT
  • 2023 டொயோட்டா வெல்ஃபயர் மாடலில் ADAS அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
  • புதிய வெல்ஃபயர் மாடலில் மூன்று மீட்டர்கள் நீளமான வீல்பேஸ் கொண்டிருக்கிறது.

டொயோட்டா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2023 வெல்ஃபயர் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை ரூ. 1 கோடியே 20 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்திய சந்தையில் புதிய டொயோட்டா வெல்ஃபயர் மாடல் Hi கிரேடு மற்றும் VIP கிரேடு என இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கிறது.

2023 டொயோட்டா வெல்ஃபயர் மாடலில் பெரிய முன்புற கிரில், மெல்லிய எல்இடி ஹெட்லேம்ப்கள் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் புதிய அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் பின்புறம் எல்இடி டெயில் லேம்ப் கிளஸ்டர்கள் உள்ளன. வெல்ஃபயர் மாடலில் ஆறு ஏர்பேக், 360 டிகிரி கேமரா, ஹில் அசிஸ்ட் கன்ட்ரோல், ADAS அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

 

புதிய வெல்ஃபயர் மாடலில் மூன்று மீட்டர்கள் நீளமான வீல்பேஸ் கொண்டிருக்கிறது. இந்த காரின் பாடி ஸ்டைல் லெக்சஸ் LM மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது. புதிய டொயோட்டா வெல்ஃபயர் மாடல் டர்போசார்ஜ் செய்யப்பட்ட 2.4 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது.

இந்த என்ஜின் 275 ஹெச்பி பவர், 430 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் CVT கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் 2.5 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் ஹைப்ரிட் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 250 ஹெச்பி பவர் வெளிப்படுத்துகிறது. இத்துடன் CVT டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News