ஆட்டோமொபைல்
ஸ்கோடா கோடியக்

ஸ்கோடா கோடியக் மாடலுக்கு திடீர் தள்ளுபடி அறிவிப்பு

Published On 2019-08-02 08:08 GMT   |   Update On 2019-08-02 08:08 GMT
ஸ்கோடா நிறுவனத்தின் கோடியக் எஸ்.யு.வி. மாடல் வாங்குவோருக்கு காரின் விலையில் தள்ளுபடி வழங்கப்படுகிறது.



இந்தியாவில் ஸ்கோடா கோடியக் கார் ஃபுல்லி லோடெட் மற்றும் எல் அண்ட் கே என இருவித வேரியண்ட்களில் கிடைக்கிறது. எஸ்.யு.வி. மாடலின் இரு வேரியண்ட்களும் முறையே ரூ. 35.36 லட்சம் மற்றும் ரூ. 36.79 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

இரு வெர்ஷன்களிலும் 2.0 லிட்டர் டி.டி.ஐ. டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 148 பி.ஹெச்.பி. பவர், 340 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 7-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது.

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பெரும்பாலான நிறுவனங்கள் விற்பனையில் மந்த நிலையை சந்தித்து வருகின்றன. கடந்த ஆறு மாதங்களாக நீடிக்கும் இந்த சூழ்நிலையால் இழப்பை கட்டுப்படுத்தவும், விற்பனையை ஊக்குவிக்கவும் கார் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களின் மாடல்களுக்கு அதிகளவு தள்ளுபடி வழங்க துவங்கியிருக்கின்றன.



அந்த வரிசையில் டெல்லி-என்.சி.ஆர். பகுதியில் உள்ள ஸ்டோகா வாகன விற்பனையாளர்கள் கோடியக் எஸ்.யு.வி. மாடலை வாங்குவோருக்கு ரூ. 2.75 லட்சம் வரை தள்ளுபடி வழங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏழுபேர் பயணிக்கக்கூடிய கோடியக் எஸ்.யு.வி. மாடல் இந்தியாவில் 2017 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. 

பின் 2018 ஆம் ஆண்டில் லாரின் அண்ட் கிளெமன்ட் வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டது. இதுதவிர இந்தியாவில் கோடியக் மிட்-சைக்கிள் ஃபேஸ்லிஃப்ட் வேரியண்ட் ஒன்றை அறிமுகம் செய்ய ஸ்கோடா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஸ்கோடா கோடியக் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் புதிய சூப்பர்ப் மாடலில் வழங்கப்பட்ட தொழில்நுட்ப அம்சங்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் இந்த மாடலில் புதிய பம்ப்பர்கள், ஹெட்லேம்ப் கிளஸ்டர்கள், புதிய கிரில் உள்ளிட்டவை வழங்கப்படும் என கூறப்படுகிறது. உள்புறத்திலும் புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News