ஆட்டோமொபைல்
ஹூன்டாய் வென்யூ

இந்தியாவில் அமோக வரவேற்பு பெறும் ஹூன்டாய் கனெக்ட்டெட் கார்

Published On 2019-07-31 07:27 GMT   |   Update On 2019-07-31 07:27 GMT
ஹூன்டாய் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஹூன்டாய் வென்யூ கார் இந்திய சந்தையில் அமோக வரவேற்பு பெற்று வருகிறது.



ஹூன்டாய் இந்தியா நிறுவனம் இந்தியாவில் வென்யூ எஸ்.யு.வி. மாடலை இந்த ஆண்டு மே மாதத்தில் அறிமுகம் செய்தது. ஹூன்டாய் வென்யூ கார் அந்நிறுவனத்தின் முதல் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்.யு.வி. ஆகும். மேலும் இது இந்தியாவின் முதல் கனெக்ட்டெட் கார் ஆகும். 

இந்தியாவில் ஹூன்டாய் வென்யூ துவக்க மாடல் விலை ரூ. 6.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய வென்யூ கார் வாங்க அறிமுகமான 60 நாட்களிலேயே 50,000 முன்பதிவுகளை பெற்றிருப்பதாக ஹூன்டய் அறிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் அதிவேக 50,000 முன்பதிவுகளை கடந்த முதல் கார் என்ற பெருமையை வென்யூ பெற்றிருக்கிறது.



இதுவரை ஹூன்டாய் நிறுவனம் சுமார் 18,000-க்கும் அதிக ஹூன்டாய் வென்யூ கார்களை விநியோகம் செய்திருக்கிறது. இவற்றில் 55 சதிவிகிதம் புளு லின்க் தொழில்நுட்பம் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கிறது.  

ஹூன்டாய் வென்யூ காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதே என்ஜின் i20 பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 83 பி.ஹெச்.பி. பவர், 115 என்.எம். டார்க், 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படுகிறது. இத்துடன் 1.4 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

டீசல் என்ஜின் 89 பி.ஹெச்.பி. பவர், 220 என்.எம். டார்க், 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இத்துடன் 1.0 லிட்டர் 3-சிலிண்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 120 பி.ஹெச்.பி. பவர், 170 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News