ஆட்டோமொபைல்
2019 பி.எம்.டபுள்யூ. 7 சீரிஸ்

புதிய பி.எம்.டபுள்யூ. 7 சீரிஸ் இந்தியாவில் வெளியானது

Published On 2019-07-26 08:54 GMT   |   Update On 2019-07-26 08:54 GMT
பி.எம்.டபுள்யூ. நிறுவனம் இந்தியாவில் தனது புதிய 7 சீரிஸ் காரை அறிமுகம் செய்தது. இதன் விலை மற்றும் விவரங்களை பார்ப்போம்.



பி.எம்.டபுள்யூ. இந்தியா நிறுவனம் புதிய 7 சீரிஸ் காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 2019 பி.எம்.டபுள்யூ. 7 சீரிஸ் மாடலின் துவக்க விலை ரூ. 1.22 கோடி (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புதிய பி.எம்.டபுள்யூ. 7 சீரிஸ் கார்: 740 Ld DPE, 740Ld DPE சிக்னேச்சர், 740 Ld M ஸ்போர்ட், 740 Li DPE சிக்னேச்சர், 745 Le xDrive மற்றும் M 760 Li xDrive என ஆறு வேரியண்ட்களில் கிடைக்கிறது. புதிய 2019 பி.எம்.டபுள்யூ. 7 சீரிஸ் மாடல்களுக்கான முன்பதிவு துவங்கிவிட்டது. விரைவில் இதன் விநியோகம் துவங்குகிறது.



செடான் மாடலில் மெல்லிய மேட்ரிக்ஸ் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள் வழங்கப்பட்டுள்ளன. காரின் உள்புறம் 7.0 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வாய்ஸ் அசிஸ்ட் வசதி, ஜெஸ்ட்யூர் கண்ட்ரோல் மற்றும் பல்வேறு அதிநவீன அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

பி.எம்.டபுள்யூ. 7 சீரிஸ் காரின் இருக்கைகள் பிரீமியம் நப்பா லெதர் மூலம் கவர் செய்யப்பட்டுள்ளது. பின்புறம் அமர்வோருக்கு 10-இன்ச் அளவில் தொடுதிரை வசதி கொண்ட டிஸ்ப்ளே மற்றும் காரின் அம்சங்களை இயக்குவதற்கான கண்ட்ரோல்கள் வழங்கப்படுகிறது.

ஆறுவித வேரியண்ட்களில் கிடைக்கும் 2019 பி.எம்.டபுள்யூ. 7 சீரிஸ் காரின் டீசல் ட்ரிம்களில் ஒரே என்ஜின் வழங்கப்படுகிறது. இது 3.0 லிட்டர் இன்-லைன் 6-சிலிண்டர் யூனிட் ஆகும். இந்த என்ஜின் 265 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 620 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.
Tags:    

Similar News