ஆட்டோமொபைல்
ஹூன்டாய் வென்யூ

ஒரே மாதத்தில் இத்தனை முன்பதிவுகளா? அசத்தும் ஹூன்டாய் வென்யூ

Published On 2019-07-23 09:44 GMT   |   Update On 2019-07-23 09:44 GMT
ஹூன்டாய் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த வென்யூ காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலின் முதல் மாத முன்பதிவு விவரங்கள் வெளியாகியுள்ளது.



ஹூன்டாய் நிறுவனத்தின் வென்யூ காம்பேக்ட் எஸ்.யு.வி. கார் இந்திய சந்தையில் அபார வரவேற்பு பெற்று வருகிறது. புதிய வென்யூ கார் முன்பதிவு துவங்கிய ஒரே மாதத்தில் 45,000-க்கும் அதிக முன்பதிவுகளை பெற்றிருக்கிறது.

முன்னதாக வென்யூ காரை வாங்க 33,000 பேர் முன்பதிவு செய்ததாகவும் இவற்றில் 1000 யூனிட்கள் ஒரே நாளில் விநியோகம் செய்யப்பட்டதாக ஹூன்டாய் நிறுவனம் தெரிவித்தது. இதுதவிர சுமார் இரண்டு லட்சம் பேர் புதிய கார் பற்றிய விவரங்களை அறிந்து கொண்டனர் என அந்நிறுவனம் தெரிவித்தது.



மாதாந்திர விற்பனையில் வென்யூ கார் பிரெஸ்ஸா மாடலை விட சில நூறு யூனிட்கள் பின்னதங்கியிருக்கிறது. ஜூன் 2019 இல் மாருதி நிறுவனம் சுமார் 8,871 விட்டாரா பிரெஸ்ஸா யூனிட்களை விற்பனை செய்தது. இதே காலக்கட்டத்தில் ஹூன்டாய் நிறுவனம் 8,763 யூனிட்களை விற்பனை செய்தது. 

ஹூன்டாய் வென்யூ காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதே என்ஜின் i20 பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 83 பி.ஹெச்.பி. பவர், 115 என்.எம். டார்க், 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படுகிறது. இத்துடன் 1.4 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

டீசல் என்ஜின் 89 பி.ஹெச்.பி. பவர், 220 என்.எம். டார்க், 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இத்துடன் 1.0 லிட்டர் 3-சிலிண்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 120 பி.ஹெச்.பி. பவர், 170 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News