ஆட்டோமொபைல்
எம்.ஜி. ஹெக்டார்

இந்த ஆண்டு ஹெக்டார் காருக்கான முன்பதிவுகள் நிறைவுற்றன - எம்.ஜி. மோட்டார்ஸ் அறிவிப்பு

Published On 2019-07-19 09:33 GMT   |   Update On 2019-07-19 09:33 GMT
எம்.ஜி. மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹெக்டார் காருக்கான இந்த ஆண்டு முன்பதிவு நிறைவுற்றதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.



எம்.ஜி. மோட்டார்ஸ் நிறுவனம் தனது முதல் காரான ஹெக்டார் எஸ்.யு.வி. மாடலை சமீபசத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்தது.

ஹெக்டார் காருக்கான முன்பதிவு ஜூன் 4 ஆம் தேதி துவங்கியது. இந்தியாவில் ஹெக்டார் எஸ்.யு.வி. மாடலின் துவக்க விலை ரூ. 12.18 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

முன்பதிவு துவங்கியது முதல் இதுவரை சுமார் 21,000 பேர் ஹெக்டார் காரை வாங்க முன்பதிவு செய்துள்ளனர். வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தும் வகையில், எம்.ஜி. மோட்டார் இந்திய சந்தையில் ஹெக்டார் காருக்கான முன்பதிவுகளை தற்காலிகமாக நிறுத்தி இருக்கிறது.



எம்.ஜி. ஹெக்டார் முன்பதிவுகள் அதிகரிக்கும் தட்டுப்பாடுகளை தவிர்க்கும் நோக்கில் நிறுத்தப்படுகிறது. இதன் மூலம் ஏற்கனவே முன்பதிவு செய்தவர்களுக்கு சரியான நேரத்தில் வாகனத்தை வழங்க இது உதவும் என கூறப்படுகிறது. 

ஹெக்டார் காரை வாங்க முன்பதிவு செய்தவர்களில் சுமார் 50 சதவிகிதம் பேர் ஸ்மார்ட் மற்றும் ஷார்ப் என டாப் எண்ட் மாடல்களை தேர்வு செய்திருக்கின்றனர்.

எம்.ஜி. மோட்டார்ஸ் நிறுவனம் ஹெக்டார் காரை குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள ஹலோல் ஆலையில் உருவாக்குகிறது. சந்தையில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடுகளை பூர்த்தி செய்யும் நோக்கில் மாதம் 3000 ஹெக்டார் கார்களை உருவாக்க எம்.ஜி. மோட்டார் திட்டமிட்டுள்ளது. 
Tags:    

Similar News