ஆட்டோமொபைல்
கியா செல்டோஸ்

ஒரே நாளில் அதிகம் பேர் முன்பதிவு செய்த செல்டோஸ் கார்

Published On 2019-07-18 09:31 GMT   |   Update On 2019-07-18 09:31 GMT
கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் செல்டோஸ் எஸ்.யு.வி. கார் முன்பதிவுகள் சமீபத்தில் துவங்கிய நிலையில், ஒரே நாளில் நடைபெற்ற முன்பதிவு விவரம் வெளியாகியுள்ளது.



கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் செல்டோஸ் எஸ்.யு.வி. காருக்கான முன்பதிவு ஜூலை 16 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக துவங்கியது. இந்நிலையில், முன்பதிவு துவங்கிய முதல் நாளிலேயே 6,046 பேர் புதிய காரை வாங்க முன்பதிவு செய்திருப்பதாக கியா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கியா செல்டோஸ் எஸ்.யு.வி. விற்பனை ஆகஸ்டு 22 ஆம் தேதி துவங்குகிறது. கியா செல்டோஸ் கார்: டெக் லைன் மற்றும் ஜி.டி. லைன் என இருவித ட்ரிம்களில் கிடைக்கிறது. இருவேரிண்ட்களும் 1.5 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் மற்றும் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளும் வசதியுடன் கிடைக்கிறது.



கியா செல்டோஸ் எஸ்.யு.வி. கார்: 115 பி.ஹெச்.பி. மற்றும் 144 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும் 1.5 லிட்டர் ஸ்மார்ட்ஸ்டிரீம் பெட்ரோல் என்ஜின், 115 பி.ஹெச்.பி. மற்றும் 250 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும் 1.5 லிட்டர் CRDi டீசல் யூனிட் மற்றும் 140 பி.ஹெச்.பி. மற்றும் 242 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும் 1.4 லிட்டர் டி-ஜி.டி.ஐ. டர்போ-பெட்ரோல் என்ஜின் என மூன்று வித ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 

மூன்று என்ஜின்களும் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், 6-ஸ்பீடு ஏ.டி., ஐ.வி.டி. மற்றும் 7-ஸ்பீடு டி.சி.டி. என மூன்று ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுடன் வருகிறது. 

புதிய செட்லோஸ் காரில் 10.25 இன்ச் ஹெச்.டி. தொடுதிரை வசதி கொண்ட டிஸ்ப்ளே, 8.0 இன்ச் ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, 360-டிகிரி சரவுண்ட் வியூ மானிட்டர், பிளைன்ட்-ஸ்பாட் மானிட்டரிங், உலகின் முதல் கனெக்ட் ஏர்-பியூரிஃபையர், கியாவின் சொந்த யு.வி.ஒ. கனெக்ட் சிஸ்டம், 8-ஸ்பீக்கர் போஸ் ஹை-ஃபை சவுண்ட் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News