ஆட்டோமொபைல்
ஹூன்டாய் கோனா கோப்புப்படம்

இந்த விலையில் எலெக்ட்ரிக் காரா? புதிய திட்டம் தீட்டும் ஹூன்டாய்

Published On 2019-07-17 11:32 GMT   |   Update On 2019-07-17 11:32 GMT
ஹூன்டாய் நிறுவனத்தின் அடுத்த எலெக்ட்ரிக் கார் விவரங்கள் வெளியாகியுள்ளது. இதில் அதன் விலை பற்றிய தகவலும் இடம்பெற்றிருக்கிறது.



ஹூன்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் சமீபத்தில் தனது எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடலான கோனா இ.வி. காரை இந்தியாவில் அறிமுகம் செய்தது. முழுமையான எலெக்ட்ரிக் காராக உருவாகியிருக்கும் ஹூன்டாய் கோனா மாடலின் துவக்க விலை ரூ. 25.30 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ஹூன்டாய் நிறுவனம் புதிதாக மற்றொரு எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. புதிய எலெக்ட்ரிக் கார் இந்திய சந்தைக்கென உருவாக்கப்படும் என்றும் இதன் விலை ரூ. 10 லட்சம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது.

புதிய எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் உள்ள உற்பத்தி செய்யப்படும் என்றும் இந்த பணிகள் சென்னையில் உள்ள ஹூன்டாய் ஆலையில் நடைபெறும் என கூறப்படுகிறது. இந்த கார் மத்திய கிழக்கு, லத்தின் அமெரிக்கா, ஆப்ரிக்கா மற்றும் ஆசியாவின் இதர
சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என கூறப்படுகிறது.



இந்தியாவுக்கென பிரத்யேக பட்ஜெட் விலை எலெக்ட்ரிக் காரை உருவாக்க ஹூன்டாய் நிறுவனம் ரூ. 2000 கோடியை முதலீடு செய்திருப்பதாக கூறப்படுகிறது. எனினும், இதன் வடிவமைப்பு பற்றிய முடிவு இதுவரை எட்டப்படவில்லை என தெரிகிறது. இது மினி எஸ்.யு.வி. அல்லது பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலாக இருக்கும் என தெரிகிறது.

இந்திய அரசு ஆட்டோமொபைல் நிறுவனங்களிடம் எலெக்ட்ரிக் வாகனங்களை உருவாக்க வலியுறுத்தி வரும் நிலையில், ஹூன்டாய் நிறுவனத்தின் சமீபத்திய திட்டங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சரியான வரவேற்பை பெற்று தரும் என தெரிகிறது. புதிய எலெக்ட்ரிக் வாகனங்கள் தவிர ஹூன்டாய் நிறுவனம் பேட்டரி தயாரிக்கும் ஆலையை துவங்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது.
Tags:    

Similar News