ஆட்டோமொபைல்
ஃபோக்ஸ்வேகன் பீட்டில்

81 ஆண்டு பாரம்பரியம் - பிரியாவிடை கொடுத்த ஃபோக்ஸ்வேகன்

Published On 2019-07-13 11:04 GMT   |   Update On 2019-07-13 11:04 GMT
ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் 81 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க கார் பிரியாவிடை பெற்றுக் கொண்டது.



ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் கடைசி பீட்டில் கார் வெளியாகியுள்ளது. 1938 ஆம் ஆண்டு துவங்கிய பீட்டில் உற்பத்தி தற்சமயம் நிரந்தரமாக நிறுத்தப்பட்டு விட்டது.

உலகம் முழுக்க பல்வேறு ஃபோக்ஸ்வேகன் ஆலைகளில் இதுவரை சுமார் இரண்டு கோடிக்கும் அதிக பீட்டில் கார்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. பீட்டில் மாடலின் கடைசி கார் பீட்டில் ஃபைனல் எடிஷன் என அழைக்கப்படுகிறது. இதன் வெளிப்புறம் டெனிம் புளு பெயின்ட் செய்யப்பட்டுள்ளது.

இந்த கார் விற்பனை செய்யப்படாமல் மெக்சிகோ நகரில் உள்ள ஃபோக்ஸ்வேகன் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்படுகிறது. 81 ஆண்டுகள் விற்பனையில் இருந்த பாரம்பரிய பீட்டில் கார் வெறும் மூன்று தலைமுறை மாடல்களே வெளியிடப்பட்டன. இதன் முதல் தலைமுறை பீட்டில் கார் 1938 முதல் 2003 ஆம் ஆண்டு வரை விற்பனை செய்யப்பட்டது.



இதன் இரண்டாம் தலைமுறை மாடல் 1998 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது, பின் 2012 ஆம் ஆண்டு மூன்றாம் தலைமுறை பீட்டில் கார் வெளியானது. இந்த கார் 2015 முதல் 2018 வரை இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டது.

ஃபோக்ஸ்வேகன் பீட்டில் முதல் தலைமுறை மாடல் விற்பனை நிறுத்தும் முன் வரை 21.5 கோடி யூனிட்கள் விற்பனையாகி இருந்தது. பின் இரண்டாம் தலைமுறை மாடல் 12 கோடி யூனிட்கள் 1998 முதல் 2010 ஆம் ஆண்டு வரை விற்பனை செய்யப்பட்டது. மூன்றாம் தலைமுறை பீட்டில் கார் வெறும் ஐந்து லட்சம் யூனிட்களே உருவாக்கப்பட்டன.
Tags:    

Similar News