ஆட்டோமொபைல்
டாடா ஹேரியர்

இந்தியாவில் டாடா கார் விற்பனை விரைவில் நிறுத்தம்?

Published On 2019-07-04 10:51 GMT   |   Update On 2019-07-04 10:51 GMT
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய கார் மாடலின் விற்பனையை நிறுத்தப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.



டாடா நிறுவனத்தின் ஹேரியர் கார் இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் எஸ்.யு.வி. மாடலாக இருக்கிறது. இந்தியாவில் டாடா ஹேரியர் கார் அந்நிறுவனத்தின் ஹெக்சா காருக்கு மாற்றாக களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற்ற 2019 ஜெனீவா சர்வதேச மோட்டார் விழாவில் டாடா ஹேரியர் கார் அறிமுகம் செய்யப்பட்டது. தற்சமயம் வெளியாகியிருக்கும் தகவல்களில் டாடா ஹேரியர் கார் டாடா ஹெக்சா காருக்கு மாற்றாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

இந்தியாவில் டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்யும் விலை உயர்ந்த கார் மாடலாக டாடா ஹெக்சா இருக்கிறது. இந்த கார் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இது டாடா ஆரியா மாடலுக்கு மாற்றாக அறிமுகமாகி 2017 ஆம் ஆண்டு இங்கு வெளியானது.



இந்திய சந்தையில் ஹெக்சா கார் எதிர்பார்த்த விற்பனையை பூர்த்தி செய்யவில்லை என்பதால், இந்த காரின் விற்பனையை நிறுத்த டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. டாடா ஹெக்சா காரில் 2.2 லிட்டர் டர்போ-டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 153.8 பி.ஹெச்.பி. பவர், 400 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.

2020 ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் கார்களில் பி.எஸ். 6 ரக எமிஷன்களை பின்பற்ற அரசு உத்தரவிட்டிருக்கிறது. இந்நிலையில், ஹெக்சா காரை பி.எஸ். 6 விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்வதற்கு அதிக செலவாகும் என்பதால் டாடா மோட்டார்ஸ் ஹெக்சா காரை அப்டேட் செய்ய வேண்டாம் என முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

இதன் காரணமாக ஹெக்சா காருக்கு மாற்றாக புதிய ஹேரியர் எஸ்.யு.வி. மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tags:    

Similar News