ஆட்டோமொபைல்
ஆடி இ டிரான்

பிரமிக்க வைக்கும் ஆடி இ டிரான் எலெக்ட்ரிக் கார்

Published On 2019-06-30 11:24 GMT   |   Update On 2019-06-30 11:24 GMT
ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி இந்தியாவில் தனது இ டிரான் எலெக்ட்ரிக் கார் விவரங்களை வெளியிட்டுள்ளது.



ஜெர்மனி நாட்டு ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி தனது இ டிரான் எலெக்ட்ரிக் கார் விவரங்களை வெளியிட்டுள்ளது. இந்த கார் ஜூலை 12 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. 

ஆடி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் நவம்பர் மாதத்தில் வெளியாக இருக்கிறது. இந்தியாவில் வெளியானதும் இ டிரான் கார் மெர்சிடிஸ் பென்ஸ் இ.கியூ.சி. மற்றும் ஜாகுவார் ஐ-பேஸ் உள்ளிட்ட கார்களுக்கு போட்டியாக இருக்கும் என தெரிகிறது.

புதிய ஆடி இ டிரான் கார் ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் எம்.இ.பி. பிளாட்ஃபார்மில் உருவாகியுள்ளது. காரின் அளவு ஆடி கியூ5 மற்றும் கியூ7  மாடல்களுக்கு மத்தியில் இருக்கிறது. இ டிரான் காரில் அகலமான சில்வர் ஃபினிஷ் கிரில், டைனமிக் ஃபிளாப்கள் வழங்கப்பட்டுள்ளன.



ஆடி இ டிரான் காரில் ஷார்ப் கட் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன. காரின் பக்கவாட்டில் வழக்கமான ஆடி வடிவமைப்பு பின்பற்றப்பட்டுள்ளது. புதிய எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. கார் 20-இன்ச் கிரே வீல்களை கொண்டிருக்கிறது. இதன் ரியர்வியூ கண்ணாடிகள் பக்கவாட்டில் கேமராக்களாக வழங்கப்பட்டுள்ளன.

புதிய இ டிரான் காரின் முன்புறம் இடதுபக்க ஃபென்டரில் சார்ஜிங் சாக்கெட் பொருத்தப்பட்டுள்ளது. புதிய காரை ஒருமுறை சார்ஜ் செய்தால் 400 கிலோமீட்டர் வரை செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காரில் 432 செல்கள் 36 மாட்யூல்களில் வழங்கப்பட்டுள்ளது.

காரின் பின்புறம் மெல்லிய ஏரோ-ட்வீக் செய்யப்பட்ட எல்.இ.டி. டெயில்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளது. இவை எல்.இ.டி. லைட் ஸ்ட்ரிப்களால் இணைக்கப்பட்டுள்ளன. காட்சிக்கு வைக்கப்பட்ட ஆடி இ டிரான் கார் முற்றிலும் பிளாக் இன்டீரியர் மற்றும் பிரீமியம் லெதர் இருக்கைகளை கொண்டிருக்கிறது.
Tags:    

Similar News