ஆட்டோமொபைல்

இந்தியாவில் எம்.ஜி. ஹெக்டார் வெளியானது

Published On 2019-06-27 10:16 GMT   |   Update On 2019-06-27 10:16 GMT
எம்.ஜி. மோட்டார் நிறுவனம் இந்தியாவில் தனது ஹெக்டார் காரினை வெளியிட்டுள்ளது. இதன் விலை விவரங்களை பார்ப்போம்.



எம்.ஜி. மோட்டார் நிறுவனம் இந்தியாவில் தனது ஹெக்டார் காரை வெளியிட்டது. புதிய ஹெக்டார் அந்நிறுவனத்தின் முதல் மாடல் ஆகும். இந்தியாவில் எம்.ஜி. ஹெக்டார் காரின் விலை ரூ. 12.18 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புதிய ஹெக்டார் கார்: ஸ்டைல், சூப்பர், ஸ்மார்ட் மற்றும் ஷார்ப் என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் டாப்-எண்ட் மாடல் விலை ரூ. 16.88 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் எம்.ஜி. ஹெக்டார் காருக்கான முன்பதிவு ரூ. 50,000 கட்டணத்தில் ஏற்கனவே துவங்கப்பட்டு விட்டது. எம்.ஜி. மோட்டார் விற்பனை மையங்களில் புதிய ஹெக்டார் கார் ஏற்கனவே வந்தடைந்து விட்டது. அந்த வகையில் இந்த காரின் விநியோகம் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



புதிய எம்.ஜி. ஹெக்டார் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல், 2.0 லிட்டர் எஃப்.சி.ஏ. டீசல் என்ஜின் என இருவித ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் 1.5 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் 141 பி.ஹெச்.பி. பவர், 250 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் என இருவித டிரான்ஸ்மிஷன்களில் கிடைக்கிறது.

காரின் உள்புறம் 10.3 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இது வோடபோனின் இசிம் தொழிலநுட்பத்தில் இணைய வசதியை வழங்குகிறது. எம்.ஜி. ஹெக்டார் டிஸ்ப்ளேவில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே போன்ற கனெக்டிவிட்டி வசதியும், எதிர்காலத்தில் டன்-பை-டன் நேவிகேஷன் வசதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்ப்ளேவுடன் 8 ஸ்பீக்கர்கள் இணைக்கப்பட்டு ஒரு சப் ஊஃபர் மற்றும் ஆம்ப்ளிஃபையர் ஆடியோ செட்டப் வழங்கப்படுகிறது. மற்ற அம்சங்களை பொருத்தவரை 360-டிகிரி கேமரா, குரூஸ் கண்ட்ரோல், கீ-லெஸ் எண்ட்ரி, புஷ் பட்டன் ஸ்டார்ட் மற்றும் பல்வேறு இதர வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News