ஆட்டோமொபைல்

ஆடி எலெக்ட்ரிக் கார் இந்திய வெளியீட்டு விவரம்

Published On 2019-06-22 09:54 GMT   |   Update On 2019-06-22 09:54 GMT
ஆடி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



ஆடி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் ஆடி இ-டிரான் மாடல் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. தற்சமயம் இந்த கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்தியாவில் ஆடி இ-டிரான் கார் ஜூன் 27 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன் விற்பனை பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

சர்வதேச சந்தையில் களமிறங்கும் ஆடி நிறுவனத்தின் முதல் ஆடம்பர கார் மாடல் ஆகும். ஆடி இ-டிரான் காரில் கூர்மையான வடிவமைப்பு காரின் தோற்றத்தை அழகாக வெளிப்படுத்துகிறது. முன்புற கிரில் ஆக்டாகோனல் வடிவமைப்பில் வழங்கப்பட்டுள்ளது. பக்கவாட்டில் பார்க்கும் போது இ-டிரான் எஸ்.யு.வி. கிராஸ்ஓவர் சில்ஹௌட் கொண்டிருக்கிறது. 

இந்தியாவில் புதிய இ-டிரான் கார் ஆடி கியூ5 மற்றும் கியூ7 மாடல்களுக்கு மத்தியில் நிலைநிறுத்தப்படும் என தெரிகிறது. காரின் பின்புறம் ஸ்லோபிங் ரூஃப் லைன், எல்.இ.டி. டெயில்லைட்கள் வழங்கப்பட்டுள்ளன. காரின் ஒட்டுமொத்த வடிவமைப்பு கியூ ரக மாடல்களை போன்று கட்சியளிக்கிறது.



ஆடி இ-டிரான் எஸ்.யு.வி. மாடல் ஒவ்வொரு ஆக்சில்களிலும் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்களுடன் வருகிறது. முன்புற மோட்டார் 125 கிலோவாட் திறனும், பின்புற மோட்டார் 14 கிலோவாட் திறனும் வெளிப்படுத்துகிறது. இதன் செயல்திறன் 355 பி.ஹெச்.பி. மற்றும் 561 என்.எம். டார்க் கொண்டிருக்கிறது.

இதுதவிர இந்த காரில் பீஸ்ட் மோட் வசதியும் வழங்கப்படுகிறது. இது காரின் செயல்திறனை 300 கிலோவாட் வரை அதிகரிக்கும். ஆடி இ-டிரான் கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் 400 கிலோமீட்டர் வரை செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 200 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். 

மேலும் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 6.6 நொடிகளில் எட்டிவிடும். பூஸ்ட் மோடில் இந்த வேகத்தை வெறும் 5.7 நொடிகளில் செல்லும். இந்தியாவில் ஆடி இ-டிரான் கார் விலை ரூ.1.5 கோடி (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News