ஆட்டோமொபைல்

புத்தம் புதிய மெர்சிடஸ் பென்ஸ் ஜி.எல்.எஸ்.

Published On 2019-05-05 08:31 GMT   |   Update On 2019-05-05 08:31 GMT
மெர்சிடிஸ் பென்ஸ் புத்தம் புதிய ஜி.எல்.எஸ். எஸ்.யு.வி. காரின் சிறப்பம்சங்கள் மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #MercedesBenz



சொகுசு வாகனங்கள் என்றாலே மெர்சிடஸ் பென்ஸ் பிராண்டு தான் முதலில் நினைவுக்கு வரும். இந்நிறுவனம் ஜி.எல்.எஸ். வரிசையில் புதிய எஸ்.யு.வி. காரை சமீபத்தில் அறிமுகம் செய்தது. 

புதிய ஜி.எல்.எஸ். கார் பார்ப்பதற்கே கம்பீரமான தோற்றத்துடன் இருக்கிறது. 5,207 மி.மீ. நீளமும், 1,956 மி.மீ. அகலமும் கொண்டது. இது முந்தைய மாடலைக் காட்டிலும் நீளம் அகலத்தில் சற்று அதிகமானது. இதில் 12.3 அங்குல தொடு திரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. 

இதன் புதிய ஸ்டீரிங் வீல் டச்பேட் உடன் வந்துள்ளது. புதிய ஜி.எல்.எஸ். காரின் நீளம் சற்று அதிகமாக உள்ளதால் பின்னிருக்கையில் மிகவும் சவுகரியமாக பயணிக்க வழி ஏற்பட்டுள்ளது. இதில் உள்ள 7 இருக்கைகளுமே மின்சாரத்தால் அட்ஜெஸ்ட் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பது இதன் சிறப்பு. 



மூன்றாவது வரிசையை தேவைப்படாத சமயத்தில் மடித்து வைத்துக் கொள்ள முடியும். இதனால் இரண்டாம் வரிசை பயணிகளுக்கு மேலும் கூடுதல் இடம் கிடைக்கும். பின்னிருக்கை பயணிகள் வசதிக்காக 11.6 அங்குல டி.வி. திரை உள்ளது. இந்த மாடல் கார் பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் வகையில் கிடைக்கிறது.

இந்த கார் சர்வதேச சந்தையில் 2.9 லிட்டர், 6 சிலிண்டர் டர்போ சார்ஜ்டு என்ஜினைக் கொண்டிருக்கும். டீசல் மாடல் 330 ஹெச்.பி. திறன் 700 என்.எம். டார்க் செயல்திறனை வெளிப்படுத்தக் கூடியதாகும். பெட்ரோல் மாடலில் 4 லிட்டர், ட்வின் டர்போ சார்ஜ்டு வி8 என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. 

இந்த என்ஜின் 489 ஹெச்.பி. மற்றும் 700 என்.எம். டார்க் செயல்திறனை வெளிப்படுத்தக் கூடியது. இந்த வரிசையில் உள்ள அனைத்து மாடலுமே 9 ஆட்டோமேடிக் கியர்களைக் கொண்டது. அதேசமயம் நான்கு சக்கர சுழற்சியைக் கொண்டவை. இந்த மாடல் கார்கள் இந்திய சந்தையில் விரைவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News