ஆட்டோமொபைல்

விற்பனையில் புதிய மைல்கல் கடந்த மாருதி கார்

Published On 2019-05-03 10:43 GMT   |   Update On 2019-05-03 10:43 GMT
மாருதி சுசுகி நிறுவனத்தின் இக்னிஸ் கார் இந்திய விற்பனையில் புதிய மைல்கல் கடந்திருக்கிறது. #SuzukiIgnis



மாருதி சுசுகி நிறுவனத்தின் இக்னிஸ் கார் இந்தியாவில் 2017 ஜனவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகமானது முதல் மாருதி நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் ஹேட்ச்பேக் மாடலாக இக்னிஸ் கார் இருக்கிறது. அந்த வகையில் இக்னிஸ் கார் இந்தியாவில் ஒரு லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருப்பதாக மாருதி அறிவித்துள்ளது.

சமீபத்தில் மாருதி நிறுவனம் இக்னிஸ் காரை அப்டேட் செய்து புதிதாக பாதுகாப்பு அம்சங்களை வழங்கியது. அந்த வகையில் இக்னிஸ் காரில் பெல்ட் அலாரம், ரியர் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் அதிவேகமாக செல்லும் போது எச்சரிக்கை செய்யும் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.



மற்ற அம்சங்களை பொருத்தவரை இக்னிஸ் காரில் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், பகலில் எரியும் லைட்கள், எல்.இ.டி. டெயில் லேம்ப்கள், கிளைமேட் கண்ட்ரோல் சிஸ்டம் மற்றும் கீ-லெஸ் எண்ட்ரி போன்றவை வழங்கப்பட்டுள்ளது. இவற்றுடன் ஏ.பி.எஸ். மற்றும் இ.பி.டி., டூயல் ஏர்பேக், ஐசோஃபிக்ஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

மாருதி சுசுகி இக்னிஸ் கார் 1.2 லிட்டர் 4-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 82 பி.ஹெச்.பி. பவர் @6000 ஆர்.பி.எம். மற்றும் 113 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜின் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 5-ஸ்பீடு ஆட்டோமேடிக் வேரியண்ட்களில் கிடைக்கிறது.

மாருதி சுசுகி இக்னிஸ் மொத்தம் ஏழு வேரியண்ட்களில் கிடைக்கிறது. மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட ஒரே பேஸ் வேரியண்ட் சிக்மா ட்ரிம் மட்டுமே ஆகும். மற்றபடி டெல்டா, ஆல்ஃபா மற்றும் சீட்டா போன்றவற்றில் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டுள்ளன.
Tags:    

Similar News