ஆட்டோமொபைல்

மாருதி சுசுகி வேகன் ஆர் எஸ் சி.என்.ஜி. வேரியண்ட் அறிமுகம்

Published On 2019-03-06 11:29 GMT   |   Update On 2019-03-06 11:29 GMT
மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் வேகன் ஆர் 2019 ஹேட்ச்பேக் மாடலின் சி.என்.ஜி. வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #WagonRCNG



மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் 2019 வேகன் ஆர் ஹேட்ச்பேக் காரின் சி.என்.ஜி. வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது. புதிய மாருதி சுசுகி வேகன் ஆர் எஸ்-சி.என்.ஜி. கார் LXI மற்றும் LXI (O) வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை முறையே ரூ.4.84 லட்சம் மற்றும் ரூ.4.89 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

புதிய காரில் 1.0 லிட்டர் என்ஜினுடன் சி.என்.ஜி. கிட் வழங்கப்பட்டிருக்கிறது. இது கிலோவிற்கு 33.54 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என கூறப்படுகிறது. புதிய வேகன் ஆர் எஸ்-சி.என்.ஜி. மாடலில் ஸ்டான்டர்டு வாரண்டி மர்றும் மாருதி சுசுகி சர்வீஸ் சேவையுடன் வருகிறது.



வேகன் ஆர் காருடன் வரும் சி.என்.ஜி. கிட் டூயல் இ.சி.யு. மற்றும் இன்டெலிஜெண்ட் கியாஸ் போர்ட் இன்ஜெக்‌ஷன் தொழில்நுட்பத்துடன் வருகிறது. இதன் மூலம் காரின் பிக்கப் சீராகவும், அதிக மைலேஜ் கிடைக்கும். இதுதவிர புதிய கார் ஆட்டோமேடிக் ஃபியூயல் சேஞ் ஸ்விட்ச் மற்றும் ஃபியூயல் லெவல் இன்டிகேட்டர் வழங்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் மோடில் 1.0-லிட்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 67 பி,ஹெச்.பி. பவர் @5500 ஆர்.பி.எம். செயல்திறன், 90 என்.எம். டார்க் @ 3500 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. சி.என்.ஜி. வேரியண்ட் 58 பி,ஹெச்.பி. பவர் @5500 ஆர்.பி.எம். செயல்திறன், 78 என்.எம். டார்க் @ 3500 ஆர்.பி.எம். செயல்திறன் கொண்டிருக்கிறது.

இந்த என்ஜின் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. அம்சங்களை பொருத்தவரை ஸ்டான்டர்டு LXI மற்றும் LXI (O) வேரியண்ட்களில் கிடைக்கும் வசதிகள் வழங்கப்படுகின்றன.
Tags:    

Similar News