ஆட்டோமொபைல்

விரைவில் இந்தியா வரும் டியாகோ எலெக்ட்ரிக் கார்

Published On 2019-02-01 11:28 GMT   |   Update On 2019-02-01 11:28 GMT
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டியாகோ எலெக்ட்ரிக் கார் விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #TataMotors #ElectricCar



டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டியாகோ ஹேட்ச்பேக் மாடலின் எலெக்ட்ரிக் வெர்ஷனை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சந்தையில் டியாகோ எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் கார் 2020 ஆம் ஆண்டு அறிமுகமாகும் என கூறப்படுகிறது. 

டியாகோ எலெக்ட்ரிக் கார்களை டாடா மோட்டார்ஸ் ஏற்கனவே உருவாக்கி வருகிறது. எனினும், இந்த கார் சந்தையில் அறிமுகம் செய்யப்படாமல் இருக்கிறது. இதற்கு எலெக்ட்ரிக் கார்களுக்கு ஏற்ற போதுமான உள்கட்டமைப்பு வசதியில்லாததே காரணமாக இருக்கிறது.

டாடா ஹேரியர் காரின் அறிமுகத்தின் போது டாடா மோட்டார்ஸ் நிறுவன தலைவர் குயின்டர் புட்ஷெக், டாடா எலெக்ட்ரிக் கார் 2020 ஆம் ஆண்டு அறிமுகமாகும் என தெரிவித்தார். இதைத் தொடர்ந்து 2018 ஆட்டோ எக்ஸ்போவில் டியாகோ எலெக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்பட்டது.



டியாகோ எலெக்ட்ரிக் கார் 85 கிலோவாட் பேட்டரி மூலம் இயங்குகிறது. இந்த மோட்டார் 200 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதுதவிர இந்த கார் மணிக்கு 0 - 100 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை வெறும் 11 நொடிகளில் செல்லும் என்றும் மணிக்கு அதிகபட்சமாக 135 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் என டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

ஒரு முறை சார்ஜ் செய்தால் டியாகோ எலெக்ட்ரிக் கார் 100 கிலோமீட்டர் வரை செல்லும். சமீபத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஹேரியர் எஸ்.யு.வி. மாடலை அறிமுகம் செய்தது. ஹேரியர் எஸ்.யு.வி. கார் துவக்க விலை ரூ.12.69 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. 

டாடா மோட்டார்ஸ் தவிர மாருதி சுசுகி நிறுவனமும் வேகன் ஆர் எலெக்ட்ரிக் பதிப்பின் ப்ரோடோடைப் மாடலை சோதனை செய்ய துவங்கியுள்ளது. இந்த கார் 2020 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கென புதிய தொழில்நுட்பங்களை உருவாக்க டொயோட்டாவுடன் இணைந்திருக்கிறது.
Tags:    

Similar News