ஆட்டோமொபைல்

ரெனால்ட் வாகனங்களில் விரைவில் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகள் அறிமுகம்

Published On 2019-02-01 10:51 GMT   |   Update On 2019-02-01 10:51 GMT
ரெனால்ட் நிறுவனத்தின் வாகனங்களில் விரைவில் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகள் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Renault #AppleCarPlay #Android Auto



இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் என்ட்ரி-லெவல் மாடல்களிலும் அதிகளவு அம்சங்கள் வழங்கப்படுகின்றன. மாருதி சுசுகி சமீபத்தில் அறிமுகம் செய்த 2019 வேகன் ஆர் மாடலில் புதிதாக ஸ்மார்ட்பிளே இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் அறிமுகம் செய்யப்பட்டது. 

இதோபோன்று ஹூன்டாய் நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த 2018 சான்ட்ரோ மாடலில் புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டது. இவற்றில் ஸ்மா்ட்போன் கனெக்டிவிட்டி அம்சம் இடம்பெற்றிருக்கிறது. அந்த வகையில் ரெனால்ட் நிறுவனமும் தனது வாகனங்களில் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகளை வழங்க இருப்பதாக கார்அன்ட்பைக் வெளியிட்டிருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



ரெனால்ட் க்விட் மாடலில் துவங்கி அனைத்து கார்களிலும் புதிதாக கனெக்டிவிட்டி அம்சங்கள் வழங்கப்பட இருக்கின்றன. இதுதவிர 2019 ரெனால்ட் கார்களில் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகள் வழங்கப்பட இருக்கின்றன. ரெனால்ட் டாப் எண்ட் மாடல்களில் புதிய வசதிகள் பிப்ரவரி 12 ஆம் தேதி முதல் அப்டேட் செய்யப்படும் என கூறப்படுகிறது.

தொடுதிரை வசதியுடன் இன்ஃபோடெயின்மென்ட் வசதி கொண்ட முதல் என்ட்ரி-லெவல் மாடலாக ரெனால்ட் க்விட் இருந்தது. எனினும் இதில் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி வசதிகள் வழங்கப்படாமல் 7-இன்ச் தொடுதிரை, ப்ளூடூத், யு.எஸ்.பி. மற்றும் ஆக்ஸ் கனெக்டிவிட்டி வழங்கப்பட்டிருக்கிறது.

ரெனால்ட் மாடலில் புதிய வசதிகள் வழங்கப்படுவதால் காரின் விற்பனை அதிகரிக்க முக்கிய காரணமாக இருக்கும் என கூறப்படுகிறது. தற்சமயம் க்விட், டஸ்டர், கேப்டுர் மற்றும் லாட்ஜி உள்ளிட்ட கார்களின் டாப்-எண்ட் மாடல்களில் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News