ஆட்டோமொபைல்

இந்தியாவில் புதிய மைல்கல் படைத்த ஜீப் காம்பஸ்

Published On 2018-04-06 11:05 GMT   |   Update On 2018-04-06 11:05 GMT
ஜீப் இந்தியா சமீபத்தில் அறிமுகம் செய்திருந்த காம்பஸ் மாடல் இந்திய விற்பனையில் புதிய மைல்கல் சாதனையை படைத்திருக்கிறது.
புதுடெல்லி:

ஜீப் இந்தியா கடந்த ஆண்டு அறிமுகம் செய்தக காம்பஸ் இதுவரை மட்டும் 20,000 யூனிட்கள் விற்பனையாகியுள்ளது. புதிய காம்பஸ் எஸ்யுவி இந்தியாவில் அதிக விற்பனையாகும் அமெரிக்க மாடலாக இருக்கிறது.

இதுமட்டுமின்றி தயாரிப்புகளில் அந்நிறுவனம் 25,000 யூனிட்களை கடந்திருக்கிறது. இதன் 5000 யூனிட்கள் ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. காம்பஸ் மாடலில் உள்ள 65 சதவிகித உள்ளூர் பாகங்களை கொண்டுள்ளதால் இந்திய விற்பனையில் பலத்த போட்டியாக இருக்கிறது.

ஜீப் காம்பஸ் நிறுவனத்தின் ரன்சஞ்கோன் தயாரிப்பு ஆலையில் தயாரிக்கப்படுகிறது. இந்தியா முழுக்க 47 நகரங்களில் 50 விற்பனை மையங்களில் ஜீப் காம்பஸ் விற்பனை செய்யப்படுகிறது. புதிய மாடலுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக தயாரிப்பு பணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டன.



ஜீப் காம்பஸ் எஸ்.யு.வி. இரண்டு வித இன்ஜின் ஆப்ஷன்களுடன் வெளியிடப்பட்டுள்ளது. இதன் பெட்ரோல் இன்ஜின் 1.4 லிட்டர் மல்டி-ஏர் டர்போ மோட்டார் 160 bhp செயல்திறன் மற்றும் 250 Nm பீக் டார்கியூ, 6-ஸ்பீடு மற்றும் 7-ஸ்பீடு DCT ஆட்டோமேடிக் கொண்டுள்ளது. 

டீசல் பவர் 2.0 லிட்டர் மல்டிஜெட் ஆயில் பர்னர் 170 bhp மற்றும் 350 Nm பீக் டார்கியூ, 6-ஸ்பீடு மேனுவல் இன்ஜின் வழங்கப்படுகிறது. இதன் பெட்ரோல் இன்ஜின் 2WD, டீசல் இன்ஜின் 2WD மற்றும் 4WD ஆப்ஷன்களை கொண்டுள்ளது. இரண்டு இன்ஜின்களும் BS-VI வகை எமிஷன் கொண்டுள்ளது. 

ஜீப் இந்தியா காம்பஸ் எஸ்.யு.வி. மாடலுக்கு 3 ஆண்டுகள் அதாவது 1,00,000 கிலோமீட்டர் வாரண்டி, மூன்று ஆண்டுகள் செல்லுபடியாகும் FCA மோபர் கேர் மற்றும் 24x7 ரோடுசைடு அசிஸ்டன்ஸ் வழங்கப்படுகிறது. ஆண்டிற்கு ஒரு சர்வீஸ் செய்ய ரூ.15,000 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News