பைக்

சிம்பில் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வினியோகம் இந்தியாவில் துவக்கம்

Published On 2023-06-07 08:20 GMT   |   Update On 2023-06-07 08:20 GMT
  • இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பல்வேறு கட்டங்களில் வினியோகம் செய்யப்படுகிறது.
  • நாடு முழுக்க 40 முதல் 50 நகரங்களில் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்ய சிம்பில் எனர்ஜி இலக்கு.

பெங்களூரை சேர்ந்த சிம்பில் எனர்ஜி நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் வாகனம், சிம்பில் ஒன் மாடலின் வினியோகத்தை துவங்கி இருக்கிறது. சிம்பில் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவு ஆகஸ்டு 2021 வாக்கில் துவங்கியது. எனினும், பல்வேறு காரணங்களால் இதன் வெளியீடு மற்றும் வினியோகம் தொடர்ந்து தாமதமாகி வந்தது.

பல்வேறு தடைகளை கடந்து சிம்பில் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை ரூ. 1 லட்சத்து 45 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பல்வேறு கட்டங்களில் வினியோகம் செய்யப்படும் என சிம்பில் எனர்ஜி நிறுவனம் தெரிவித்து இருந்தது.

அந்த வகையில், தற்போது பெங்களூருவில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் வினியோகம் துவங்கி நடைபெற்று வருகிறது. அடுத்த 12 மாதங்களுக்குள் நாடு முழுக்க 40 முதல் 50 நகரங்களில் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்ய சிம்பில் எனர்ஜி நிறுவனம் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

சிம்பில் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் ஒற்றை வேரியண்ட் மற்றும் ஆறு விதமான நிறங்களில் கிடைக்கிறது. அனைத்து நிறங்களின் விலையும் ரூ. 1 லட்சத்து 45 ஆயிரம் , எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எனினும், 750 வாட் ஃபாஸ்ட் சார்ஜர் வேரியண்டை தேர்வு செய்யும் போது கூடுதலாக ரூ. 13 ஆயிரம் செலுத்த வேண்டும்.

Tags:    

Similar News