பைக்

முன்பணம் வேண்டாம்.. பைக்கை எடுத்துட்டு போங்க - ரெவோல்ட் மோட்டார்ஸ் அதிரடி அறிவிப்பு

Published On 2024-07-14 13:41 IST   |   Update On 2024-07-14 13:41:00 IST
  • ரூ. 5 ஆயிரம் எக்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது.
  • இந்த மாடல் அதிகபட்சம் 150 கி.மீ. ரேஞ்ச் வழங்குகிறது.

எலெக்ட்ரிக் இருசக்கர வாகன பிரான்ட், ரெவோல்ட் மோட்டார்ஸ் தனது எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் வாங்குவோருக்கு புதிய நிதி சலுகைகளை அறிவித்து இருக்கிறது. அதன்படி பயனர்கள் எவ்வித முன்பணமும் செலுத்தாமல் தனது RV400 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை வாங்க முடியும். இதற்கான மாத தவணை ரூ. 4 ஆயிரத்து 444 ஆகும்.

வாடிக்கையாளர்கள் தங்களது வருமான சான்று, ஸ்டாம்ப் டியூட்டி அல்லது பிராசஸிங் கட்டணம் என எதுவும் செலுத்தாமல், டிஜிட்டல் முறையில் இந்த சலுகையை பெற முடியும். இதுபற்றிய முழு விவரங்கள் அந்நிறுவன விற்பனை மையங்களில் தெரிந்து கொள்ளலாம் என்று ரெவோல்ட் தெரிவித்துள்ளது.

இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதன் மூலம் ரெவோல்ட் நிறுவனம் தனது வாகன விற்பனையை அதிகப்படுத்த முயற்சிக்கிறது. முன்னதாக இதேபோன்ற அறிவிப்பில் அந்நிறுவனம் தனது RV400 ஸ்டான்டர்டு மற்றும் BRZ மாடல்களுக்கு ரூ. 5 ஆயிரம் விலை குறைப்பை வழங்கியது குறிப்பிடத்தக்கது. இத்துடன் ரூ. 10 ஆயிரம் கூடுதல் தள்ளுபடி, ரூ. 5 ஆயிரம் எக்சேஞ்ச் போனஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

ரெவோல்ட் RV400 ஸ்டான்டர்டு மற்றும் BRZ மால்களில் 3 கிலோவாட் மோட்டார் மற்றும் 3.24 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் அதிகபட்சம் 150 கிலோமீட்டர்கள் வரையிலான ரேஞ்ச் வழங்குகிறது. இந்த பைக்கில் டிஜிட்டல் டிஸ்ப்ளே, மூன்று ரைட் மோட்கள், கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் போன்ற வசதிகள் உள்ளன.

Tags:    

Similar News