பைக்

இந்தியாவில் S1 சீரிஸ் விலையை உயர்த்திய ஒலா எலெக்ட்ரிக்

Update: 2023-06-01 06:26 GMT
  • எண்ட்ரி லெவல் மாடலான ஒலா S1 ஏர் விலை மட்டும் மாற்றப்படவில்லை.
  • டாப் எண்ட் மாடலான ஒலா S1 ப்ரோ விலை மாறி இருக்கிறது.

எலெக்ட்ரிக் வாகனங்கள் வாங்குவோருக்கு இந்தியாவில் வழங்கப்பட்டு வந்த ஃபேம் 2 திட்டம் நேற்றுடன் ரத்தாகி விட்டது. இதன் காரணமாக எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் விலை அதிகரிக்க துவங்கி விட்டது. அதன்படி ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது S1 மற்றும் S1 ப்ரோ மாடல்களின் விலையை உயர்த்தி இருக்கிறது.

தற்போதைய விலை உயர்வில் எண்ட்ரி லெவல் மாடலான ஒலா S1 ஏர் விலை மட்டும் மாற்றப்படவில்லை. மிட் ரேன்ஜ் பிரிவில் நிலைநிறுத்தப்பட்டு இருக்கும் ஒலா S1 மாடல் 2 கிலோவாட் ஹவர் மற்றும் 3 கிலோவாட் ஹவர் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் 3 கிலோவாட் ஹவர் பேட்டரி கொண்ட மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 29 ஆயிரத்து 999 என்று மாறி இருக்கிறது.

இது அதன் முந்தைய வேரியண்டை விட ரூ. 15 ஆயிரம் அதிகம் ஆகும். டாப் எண்ட் மாடலான ஒலா S1 ப்ரோ விலை தற்போது ரூ. 1 லட்சத்து 39 ஆயிரத்து 999 என்று மாறி இருக்கிறது. இதுவும் அதன் முந்தைய விலையை விட ரூ. 15 ஆயிரம் அதிகம் ஆகும். எண்ட்ரி லெவல் ஒலா S1 ஏர் மாடலின் 3 கிலோவாட் ஹவர் பேட்டரி கொண்ட மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 09 ஆயிரத்து 999 என்று மாறி உள்ளது.

முன்னதாக ஒலா எலெக்ட்ரிக் நிறுவன தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால், பெட்ரோல் மோட்டார்சைக்கிள் குறித்து நகைச்சுவையாக மீம் போடுவோருக்கு ஒலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இலவசமாக வழங்குவதாக அறிவித்து இருந்தார். இதுபற்றிய அறிவிப்பை அவர் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் அக்கவுண்டில் வெளியிட்டுள்ளார்.

Tags:    

Similar News