பைக்

காசை திருப்பி கொடுக்கிறோம்.. ARAI அதிரடியால் ஒலா எலெக்ட்ரிக் அறிவிப்பு!

Published On 2023-05-03 08:35 GMT   |   Update On 2023-05-03 08:35 GMT
  • ஒலா S1 ப்ரோ வாடிக்கையாளர்களிடம் 2019 முதல் சார்ஜருக்கு தனியே கட்டணம் வசூலித்து வருகிறது.
  • ஒலா நிறுவனம் ஆஃப் போர்டு சார்ஜர்களை விற்று ரூ. 130 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் சார்ஜரை வாங்க தனியாக பணம் செலுத்திய தனது வாடிக்கையாளர்களுக்கு பணத்தை திரும்ப கொடுப்பதாக அறிவித்து இருக்கிறது. ஆஃப் போர்டு சார்ஜர்களை விற்று ரூ. 130 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

சார்ஜருக்கு தனியாக கட்டணம் நிர்ணயிக்கும் ஒலா எலெக்ட்ரிக் முடிவுக்கு ARAI நடவடிக்கை எடுக்க திட்டமிட்டது. எனினும், தற்போது ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்க இருப்பதாக அறிவித்து இருப்பதால், ARAI நடவடிக்கை எடுக்கும் முடிவை ரத்து செய்யலாம் என்று கூறப்படுகிறது.

முந்தைய தகவல்களின் படி ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது S1 ப்ரோ வாடிக்கையாளர்களிடம் 2019 முதல் சார்ஜருக்கு தனியே கட்டணம் வசூலித்து வருவதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. சில எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்கள் சார்ஜர் மற்றும் கூடுதல் அம்சங்களை வழங்குவதற்காக தனியே கட்டணம் வசூலிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளன.

இவ்வாறு செய்வதன் மூலம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலையை ஓரளவு குறைவாக நிர்ணயம் செய்ய முடியும். இதன் காரணமாக சில நிறுவனங்கள் அத்தியாவசிய பாகங்களான சார்ஜர்களுக்கும் தனியே கட்டணம் வசூலித்தன. இதன் மூலம் நிறுவனங்கள் ஒட்டுமொத்த விலை தவிர லாபத்தை அதிகப்படுத்த முடியும். 

Tags:    

Similar News