பைக்
null

விரைவில் எலெக்ட்ரிக் ஸ்போர்ட்பைக் அறிமுகம் செய்யும் ஒலா எலெக்ட்ரிக்

Published On 2022-11-17 08:10 GMT   |   Update On 2022-11-17 08:11 GMT
  • ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
  • எலெக்ட்ரிக் கார் தவிர புதிதாக ஸ்போர்ட்பைக் மாடலை ஒலா எலெக்ட்ரிக் உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்ய புது எலெக்ட்ரிக் பைக்கை உருவாக்கி வருவதாக தெரிகிறது. புதிய ஒலா எலெக்ட்ரிக் பைக் அல்ட்ராவைலட் F77 மாடலுக்கு போட்டியாக அமையும் என கூறப்படுகிறது. ஒலா எலெக்ட்ரிக் நிறுவன தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் ஸ்போர்ட் ரைடிங் ஸ்டைல் கொண்ட எலெக்ட்ரிக் பைக்-ஐ அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருப்பதாக ஏற்கனவே அறிவித்து இருந்தார்.

இதன் தொடர்ச்சியாக பாவிஷ் அகர்வால் தனது ட்விட்டரில் பொது மக்களிடம் எந்த மாதிரியான பைக் ஸ்டைல் உங்களுக்கு பிடிக்கும் என்ற கேள்வி அடங்கிய கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டு இருக்கிறார். அதில் 47.1 சதவீதம் பேர் ஸ்போர்ட்ஸ் மாடலை விரும்புவதாக தெரிவித்துள்ளனர். மீதமுள்ள 27.7 சதவீதம் பேர் குரூயிசர் மாடலையும், 15.1 சதவீதம் பேர் அட்வென்ச்சர் மாடலையும், 10.1 சதவீதம் பேர் கஃபே ரேசர் மாடலை விரும்புவதாக பதில் அளித்துள்ளனர்.

சமீபத்தில் தான் ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்திய சந்தையில் தனது குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது. ஒலா S1 ஏர் பெயரில் அறிமுகமான புது ஸ்கூட்டர் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. திடீரென ஒலா எலெக்ட்ரிக் சிஇஒ எலெக்ட்ரிக் பைக் பற்றிய கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டு இருப்பது, வாடிக்கையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் அல்ட்ராவைலட் F77 எலெக்ட்ரிக் ஸ்போர்ட்-பைக் மாடலுக்கு போட்டியாக புது எலெக்ட்ரிக் ஸ்போர்ட்-பைக்கை அறிமுகம் செய்யலாம் என்றும் கூறப்படுகிறது. முன்னதாக ஒலா எலெக்ட்ரிக் தலைமை செயல் அதிகாரி எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் பிரிவில் களமிறங்க விருப்பம் தெரிவித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News