பைக்

புது ஸ்கூட்டர் ரிலீஸ்-க்கு ரெடியாகும் ஹீரோ மோட்டோகார்ப்

Published On 2024-02-06 09:58 GMT   |   Update On 2024-02-06 09:58 GMT
  • ஹீரோ Xoom சீரிசில் இது ஃபிளாக்ஷிப் மாடலாக இருக்கலாம்.
  • Xoom 110 மாடலை போன்றே காட்சியளிக்கும்.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் வரும் மாதங்களில் புதிய மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வரிசையில் அதிக திறன் கொண்ட புதிய ஹீரோ Xoom மாடல்கள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த மாடல் மேக்சி ஸ்கூட்டர் மற்றும் அட்வென்ச்சர் மாடலின் இடையில் நிலை நிறுத்தப்படும் என தெரிகிறது. இந்த ஸ்கூட்டர் சற்றே வித்தியாசமான தோற்றம் கொண்டிருக்கும் என்றும் இதில் 160சிசி என்ஜின் வழங்கப்படும் என்றும் தெரிகிறது. ஹீரோ Xoom சீரிசில் இது ஃபிளாக்ஷிப் மாடலாக இருக்கலாம்.

 


அந்த வகையில், புதிய ஹீரோ Xoom மாடலில் கீலெஸ் இக்னிஷன், ரிமோட் மூலம் சீட்-ஐ திறக்கும் வசதி, ஹீரோ காப்புரிமை பெற்ற i3s ஸ்டாப்-ஸ்டார்ட் தொழில்நுட்பம் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த மாடலில் 156சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இது 14 ஹெச்.பி. பவர், 13.7 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

இதுதவிர ஹீரோ நிறுவனம் Xoom 125R மாடலையும் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் ஒட்டுமொத்த தோற்றம் தற்போது விற்பனை செய்யப்படும் Xoom 110 மாடலை போன்றே காட்சியளிக்கும். இதுதவிர எல்.இ.டி. இன்டிகேட்டர்கள், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்படலாம்.

ஹீரோ Xoom 125R மாடலில் ஏர் கூல்டு, 124.6சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 9.5 ஹெச்.பி. பவர், 10.14 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த ஸ்கூட்டர் டி.வி.எஸ். என்டார்க், சுசுகி அவெனிஸ் மற்றும் ஹோண்டா டியோ போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும்.

Tags:    

Similar News