பைக்

அசத்தல் அறிமுக சலுகையுடன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட புது 125சிசி ஸ்கூட்டர்

Published On 2025-10-03 08:58 IST   |   Update On 2025-10-03 08:58:00 IST
  • டூயல் சேனல் ஏபிஎஸ் வழங்கப்பட்டுள்ளது.
  • ஸ்கூட்டரை வாடிக்கையாளர்கள் ரூ.999 செலுத்தி முன்பதிவு செய்யலாம்.

மோட்டோ ஹவுஸ் நிறுவனம் விஎல்எப் மாப்ஸ்டர் 135 என்ற ஸ்கூட்டரை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதில் 125 சிசி சிங்கிள் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் இடம்பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 12.1 பிஹெச்பி பவர், 11.7 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்தும்.

இந்த ஸ்கூட்டர் அதிகபட்சமாக மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். ஒரு லிட்டருக்கு 46 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என நிறுவன தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதுதவிர, டிஆர்எல்-களுடன் கூடிய டூயல் புரொஜெக்டர் எல்இடி ஹெட்லேம்ப், காம்பேக்ட் வைசர், ஆங்குலர் சைடு பேனல், எல்இடி டெயில் லைட்டுகள், முன்புறம் டெலஸ்கோப்பிக் சஸ்பென்ஷன், பின்புறம் இரட்டை ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்பட்டுள்ளன.

புதிய ஸ்கூட்டரில் ப்ளூடூத் கனெக்டிவிட்டி கொண்ட 5 இன்ச் டிஎப்டி கலர் டிஸ்பிளே, டிராக்ஷன் கண்ட்ரோல், 12 வாட்ஸ் யுஎஸ்பி சார்ஜர் போர்ட் உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இத்துடன் டூயல் சேனல் ஏபிஎஸ் வழங்கப்பட்டுள்ளது.

இந்திய சந்தையில் புதிய விஎல்எப் மாப்ஸ்டர் விலை ரூ.1.38 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அறிமுகச் சலுகை விலை சுமார் ரூ.1.29 லட்சம் எனவும், இந்த சலுகை முதல் 2,500 முன்பதிவுகளுக்கு மட்டுமே பொருந்தும் என்று நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரை வாடிக்கையாளர்கள் ரூ.999 செலுத்தி முன்பதிவு செய்யலாம்.

Tags:    

Similar News