பைக்

ரூ. 47 ஆயிரம் துவக்க விலையில் ஜிடி போர்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்

Update: 2022-09-30 08:11 GMT
  • ஜிடி போர்ஸ் நிறுவனத்தின் புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன.
  • புதிய ஜிடி போர்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலை சந்தையில் கடும் போட்டியை ஏற்படுத்தும் வகையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

ஜிடி போர்ஸ் நிறுவனத்தின் இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. இரு ஸ்கூட்டர்களும் குறைந்த வேகத்தில் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. ஜிடி போர்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்- ஜிடி சோல் வேகாஸ் மற்றும் ஜிடி டிரைவ் ப்ரோ பெயரில் அறிமுகமாகி உள்ளன. இவற்றின் விலை முறையே ரூ. 47 ஆயிரத்து 370 மற்றும் ரூ. 67 ஆயிரத்து 290 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன.

புதிய ஜிடி சோல் வேகாஸ் மாடல் லீட் ஆசிட் பேட்டரி மற்றும் லித்தியம் அயன் பேட்டரி என இரண்டு விதமான வேரியண்ட்களில் கிடைக்கிறது. ஜிடி சோல் வேகாஸ் லெக்ட்ரிக் ஸ்கூட்டரின் லித்தியம் அயன் பேட்டரி மாடலின் விலை லீட் ஆசிட் வேரியண்டை விட அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஜிடி சோல் வேகாஸ் லித்தியம் அயன் பேட்டரி பேக் விலை ரூ. 63 ஆயிரத்து 641 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரை முழு சார்ஜ் செய்தால் 65 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் கொண்டிருக்கிறது.

ஜிடி சோல் பிளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் லீட் ஆசிட் பேட்டரி வேரியண்ட் முழு சார்ஜ் செய்தால் 60 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 8 மணி நேரம் ஆகும். இந்த ஸ்கூட்டரின் எடை 95 கிலோ ஆகும். இது ஜிடி சோல் வேகாஸ் லித்தியம் அயன் பேட்டரி பேக் மாடலை விட 7 கிலோ வரை எடை அதிகம் ஆகும்.

ஜிடி சோல் வேகாஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கிளாசி ரெட், கிரே மற்றும் ஆரஞ்சு என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்கூட்டரில் ஆண்டி-தெஃப்ட் அலாரம், ரிவர்ஸ் மோட், குரூயிஸ் கண்ட்ரோல், சிஸ்டம், இக்னிஷன் லாக் ஸ்டார்ட், ஹைட்ராலிக் டெலிஸ்கோபிக் முன்புற சஸ்பென்ஷன், டூயல் டியூப் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளன. ஜிடி டிரைவ் ப்ரோ மாடலின் லித்தியம் அயன் பேட்டரி பேக் மாடல் விலை ரூ. 82 ஆயிரத்து 751 ஆகும். இந்த ஸ்கூட்டர் 75 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்குகிறது.

Tags:    

Similar News