பைக்

160கி.மீ. ரேன்ஜ், 7 அட்டகாசமான நிறங்கள்- அசர வைக்கும் ஏத்தர் ரிஸ்டா

Published On 2024-04-08 12:18 GMT   |   Update On 2024-04-08 12:18 GMT
  • ஏத்தர் ரிஸ்டா மாடல் நான்கு டூயல் டோன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
  • இந்த மாடலில் PMSM எலெக்ட்ரிக் மோட்டார் உள்ளது.

ஏத்தர் எனர்ஜி நிறுவனம் ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை ஏத்தர் கம்யூனிட்டி டே 2024 நிகழ்ச்சியில் சமீபத்தில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்கூட்டர் இரண்டு மாடல்கள் மற்றும் ஏழு வெவ்வேறு நிறங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. புதிய ஏத்தர் ரிஸ்டா மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 10 ஆயிரம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 1 லட்சத்து 45 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

புதிய ஏத்தர் ரிஸ்டா S மாடல் மூன்று மோனோடோன் நிறங்களிலும், ரிஸ்டா Z ஏழு நிறங்கள்- மூன்று மோனோடோன், நான்கு டூயல் டோன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. மோனோடோனில் பாங்காங் புளூ, சியாசென் வைட் மற்றும் டெக்கான் கிரே ஆப்ஷன்களும், டூயல் டோனில் பாங்காங் புளூ-வைட், கார்டமம் கிரீன்-வைட், அல்போன்சே எல்லோ-வைட், டெக்கான் கிரே-வைட் போன்ற ஆப்ஷன்கள் உள்ளன.

 


ஏத்தர் ரிஸ்டா மாடலில் PMSM எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மோட்டார் 5.76 ஹெச்.பி. பவர், 22 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இந்த ஸ்கூட்டரின் அனைத்து வேரியண்ட்களும் மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். மேலும் மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தை 4.7 நொடிகளில் எட்டிவிடும்.

புதிய ரிஸ்டா S மற்றும் ரிஸ்டா Z வேரிண்ட்களில் முறையே 2.9 கிலோவாட் ஹவர் மற்றும் 3.7 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இவை முறையே 123 மற்றும் 160 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என சான்று பெற்றுள்ளன.

இதன் 2.9 கிலோவாட் ஹவர் மாடலில் 350 வாட் சார்ஜர் வழங்கப்படுகிறது. இது பேட்டரியை 6 மணி 40 நிமிடங்களில் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்திடும். முழுமையாக சார்ஜ் செய்ய 8 மணி 30 நிமிடங்களை எடுத்துக் கொள்ளும்.

3.7 கிலோவாட் ஹவர் வேரியண்ட் உடன் 700 வாட் ஏத்தர் டுயோ சார்ஜர் வழங்கப்படுகிறது. இது 4 மணி 30 நிமிடங்களில் 80 சதவீதம் வரையிலும், 6 மணி 10 நிமிடங்களில் முழுமையாகவும் சார்ஜ் செய்துவிடும். புதிய ரிஸ்டா மாடலில் அண்டர்போன் சேசிஸ், நீளமான சப் ஃபிரேம், முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், பின்புறம் மோனோஷாக் யூனிட் வழங்கப்படுகிறது. 

Tags:    

Similar News