பைக்

வேற லெவல் ஸ்டைலிங், 110கி.மீ. ரேன்ஜ் - ஏத்தர் 450 அபெக்ஸ் இந்தியாவில் அறிமுகம்

Published On 2024-01-06 10:31 GMT   |   Update On 2024-01-06 10:31 GMT
  • இந்த வேரியண்ட் ஸ்டான்டர்டு மாடலை போன்றே காட்சியளிக்கிறது.
  • இதன் வழியே ஆரஞ்சு நிற ஃபிரேம் காணப்படுகிறது.

ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தனது விலை உயர்ந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. ஏத்தர் 450 அபெக்ஸ் என பெயரிடப்பட்டு இருக்கும் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை ரூ. 1 லட்சத்து 89 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தோற்றத்தில் இந்த வேரியண்ட் ஸ்டான்டர்டு மாடலை போன்றே காட்சியளிக்கிறது.

எனினும், பக்கவாட்டில் கண்ணாடி போன்ற பாடி பேனல்கள் இடம்பெற்றுள்ளன. இதன் வழியே ஆரஞ்சு நிற ஃபிரேம் காணப்படுகிறது. இதன் இடதுபுறம் பெல்ட் டிரைவ் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய 450 அபெக்ஸ் மாடலில் 7 கிலோவாட் மோட்டார் மற்றும் 3.7 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.

 


ஸ்டான்டர்டு மாடலுடன் ஒப்பிடும் போது 450 அபெக்ஸ் மாடல் 10 கிலோமீட்டர் வரை வேகமாக செல்கிறது. மேலும் மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தையும் இந்த ஸ்கூட்டர் 2.9 நொடிகளில் எட்டிவிடுகிறது. ஏத்தர் 450X மாடல் இதற்கு 3.3 நொடிகளை எடுத்துக் கொள்கிறது.

புதிய ஏத்தர் 450 அபெக்ஸ் மாடல்- ஸ்மார்ட் இகோ, இகோ, ரைடு, ஸ்போர்ட், வார்ப் மற்றும் வார்ப் பிளஸ் என ஆறுவித ரைடு மோட்களை கொண்டிருக்கிறது. இந்த ஸ்கூட்டரில் ஃபுல் எல்.இ.டி. லைட்டிங், 7 இன்ச் அளவில் டச் ஸ்கிரீன் டி.எஃப்.டி. ஸ்கிரீன், ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, டேஷ்போர்டு ஆட்டோ பிரைட்னஸ் வசதி, பார்க் அசிஸ்ட் போன்ற அம்சங்கள் உள்ளன.

இதுதவிர ஹில் ஹோல்டு, ஆட்டோ இன்டிகேட்டர் கட் ஆஃப், கோஸ்டிங் ரீஜெனரேடிவ் பிரேக்கிங் மற்றும் மேஜிக் டுவிஸ்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. ரீஜெனவேரடிவ் பிரேக்கிங் சிஸ்டத்தின் அதிநவீன வெர்ஷன் தான் மேஜிக் டுவிஸ்ட் என ஏத்தர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஸ்கூட்டரில் முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், பின்புறம் மோனோஷாக் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது.

பிரேக்கிங்கிற்கு முன்புறம் 200 மில்லிமீட்டர் டிஸ்க், பின்புறம் 190 மில்லிமீட்டர் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டு உள்ளது. இவற்றுடன் 12 இன்ச் வீல்கள் உள்ளன. ஏத்தர் 450 அபெக்ஸ் மாடலில் 22 லிட்டர் அன்டர் சீட் ஸ்டோரேஜ் உள்ளது. இந்த ஸ்கூட்டரின் மொத்த எடை 111.6 கிலோ ஆகும். இந்த ஸ்கூட்டர் ஐந்து ஆண்டுகள் அல்லது 60 ஆயிரம் கிலோமீட்டர்கள் பேட்டரி வாரண்டியுடன் விற்பனை செய்யப்படுகிறது.

Tags:    

Similar News