பைக்

புது அப்டேட்களுடன் அறிமுகம் செய்யப்பட்ட 2025 அப்ரிலியா SR 125

Published On 2025-07-17 14:56 IST   |   Update On 2025-07-17 14:56:00 IST
  • இது 124.45 சிசி சிங்கில் சிலிண்டர் ஏர்-கூல்டு 3-வால்வுகள் கொண்ட எஞ்சின் ஆகும்.
  • கார்பன்-ஃபினிஷ் செய்யப்பட்ட டீடெய்லிங் சற்று கூடுதலாக உள்ளது.

அப்ரிலியா இந்தியா நிறுவனம் 2025 SR 125 மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. ஏற்கனவே SR 175 மாடல் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்த மாடல் வெளியாகி இருக்கிறது. புதிய SR 125 மாடலில் புதுப்பிக்கப்பட்ட 125 சிசி எஞ்சின் மற்றும் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் அதன் அழகியலில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் ரூ.1.20 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் விற்கப்படும்.

2025 அப்ரிலியா SR 125 நிறுவனத்தின் உயர் செயல்திறன் கொண்ட பிளாட்ஃபார்மை அடிப்படையாகக் கொண்டது. இது 124.45 சிசி சிங்கில் சிலிண்டர் ஏர்-கூல்டு 3-வால்வுகள் கொண்ட எஞ்சின் ஆகும். இந்த யூனிட் 10 ஹெச்பி பவர், 10 நியூட்டன் மீட்டர் டார்க்கையும் உற்பத்தி செய்யும் வகையில் டியூன் செய்யப்பட்டுள்ளது.

இத்துடன் continuously variable டிரான்ஸ்மிஷனுடன் dry centrifugal கிளட்ச் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு 90 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல ஆற்றல் கொண்டுள்ளது.

2025 அப்ரிலியா SR 125, ஏற்கனவே விற்பனையில் இருக்கும் மாடலைப் போலவே கிட்டத்தட்ட அதே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இதில் கார்பன்-ஃபினிஷ் செய்யப்பட்ட டீடெய்லிங் சற்று கூடுதலாக உள்ளது. இதனுடன், இந்த ஸ்கூட்டர் மேட் மற்றும் கிளாஸி ஃபினிஷ் ஆப்ஷன்களுடன் வருகிறது.

இந்த ஸ்கூட்டரில் இப்போது அதன் இன்ஸ்ட்ரூமென்ட் பேனலுக்கு 5.5-இன்ச் TFT டிஸ்ப்ளே மற்றும் ஹெட்லைட் மற்றும் டர்ன் சிக்னல்கள் இரண்டிற்கும் முழு LED லைட்டிங் உள்ளது. இதன் பிரேக்கிங் சிஸ்டத்தில் இரட்டை-பிஸ்டன் ஃபுளோட்டிங் கேலிப்பர் மற்றும் பின்புற டிரம் கொண்ட 220மிமீ முன்புற டிஸ்க் உள்ளது.

Tags:    

Similar News