ஆட்டோமொபைல்
ஒன் எலெக்ட்ரிக்

இந்தியாவில் உருவான அதிவேக எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் அறிமுகம்

Published On 2020-09-12 11:26 GMT   |   Update On 2020-09-12 11:26 GMT
ஒன் எலெக்ட்ரிக் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்திய எலெக்ட்ரிக் இருசக்கர வாகன ஸ்டார்ட்-அப் நிறுவனமான ஒன் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் தனது முதல் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை KRIDIN எனும் பெயரில் அறிமுகம் செய்து இருக்கிறது. 

இந்த எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் 5.5 கிலோவாட் ஹப்-மவுண்ட் செய்யப்பட்ட எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் 3 கிலோவாட் லித்தியம் அயன் பேட்டரியை பயன்படுத்துகிறது. இந்த எலெக்ட்ரிக் பவர்டிரெயின் 160 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.



இதனால் இந்த மோட்டார்சைக்கிள் மணிக்கு 0 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 8 நொடிகளில் எட்டிவிடும். மேலும் இது மணிக்கு அதிகபட்சம் 95 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.

இந்த மோட்டார்சைக்கிள் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட்ட அதிவேக எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் என ஒன் எலெக்ட்ரிக் தெரிவித்து இருக்கிறது. இது இகோ மற்றும் நார்மல் எ இருவித ரைடிங் மோட்களுடன் வருகிறது. 

இகோ மோடில் இந்த மோட்டார்சைக்கிள் அதிகபட்சம் 110 கிலோமீட்டர்கள் வரையிலும், நார்மல் மோடில் இது அதிகபட்சம் 80 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது. இதன் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 4 முதல் 5 மணி நேரங்கள் வரை ஆகும்.
Tags:    

Similar News