அசத்தல் அம்சங்கள் நிறைந்த கவாசகி இசட்900 பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
அசத்தல் அம்சங்களுடன் கவாசகி இசட்900 அறிமுகம்
பதிவு: செப்டம்பர் 10, 2020 14:41
கவாசகி இசட்900
கவாசகி நிறுவனம் தனது இசட்900 பிஎஸ்6 மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து உள்ளது. புதிய நேக்கட் ரோட்ஸ்டர் மாடல் விலை ரூ. 7.99 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
முந்தைய பிஎஸ்4 கவாசகி இசட்900 மாடல் விலை ரூ. 7.69 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. புதிய பிஎஸ்6 மாடலுக்கான முன்பதிவுகள் நாடு முழுக்க கவாசகி அதிகாரப்பூர்வ விற்பனை மையங்களில் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.
புதிய கவாசகி இசட்900 பிஎஸ்6 மாடலில் 948சிசி இன்-லைன், 4 சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது. பிஎஸ்4 மாடலில் இந்த என்ஜின் 123 பிஹெச்பி பவர், 98.4 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
மற்ற அம்சங்களை பொருத்த வரை கவாசகி இசட்900 பிஎஸ்6 மாலில் எல்இடி ஹெடலேம்ப் மற்றும் எல்இடி டிஆர்எல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதேபோன்று எல்இடி டெயில் லைட், எல்இடி இன்டிகேட்டர்கள் ஸ்டான்டர்டு அம்சமாக வழங்கப்பட்டு இருக்கின்றன.
இத்துடன் மேம்பட்ட புதிய ப்ளூடூத் வசதி கொண்ட 4.3 இன்ச் டிஎஃப்டி டிஸ்ப்ளே வழங்கப்பட்டு உள்ளது. இது கவாசகியின் ரைடாலாஜி செயலியுடன் இயங்குகிறது. இவைதவிர அப்சைடு-டவுன் முன்புற ஃபோர்க், பின்புறம் மோனோ ஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.
Related Tags :