ஆட்டோமொபைல்
அப்ரிலியா ஸ்டாம் 125

குத்தகைக்கு கிடைக்கும் அப்ரிலியா மற்றும் வெஸ்பா

Published On 2020-09-09 16:37 IST   |   Update On 2020-09-09 16:37:00 IST
இந்திய சந்தையில் அப்ரிலியா மற்றும் வெஸ்பா ஸ்கூட்டர் மாடல்கள் குத்தகை முறையில் வழங்கப்படுகிறது.
 

பியாஜியோ நிறுவனம் தனது அப்ரிலியா மற்றும் வெஸ்பா ஸ்கூட்டர்களை குத்தகை முறையில் வழங்குகிறது. இதற்கென பியாஜியோ ஒடிஒ கேபிட்டல் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது. முதற்கட்டமாக குத்தகை முறை பூனே மற்றும் பெங்களூரு நகரங்களில் மட்டும் வழங்கப்படுகிறது.

புதிய குத்தகை முறையில், வெஸ்பா அல்லது அப்ரிலியா ஸ்கூட்டரை குறைந்த முன்பணம் செலுத்தி வாங்கிக் கொள்ள முடியும். இதன்பின் முதல் மாத தவணை தள்ளுபடி செய்யப்படுகிறது. 



குத்தகை காலக்கட்டத்தில் வாடிக்கையாளர்கள் வாகனத்தை முன்கூட்டியே திரும்ப வழங்கும் வசதியும் வழங்கப்படுகிறது. குத்தகை முறையினை வாடிக்கையாளர்கள் ஒடிஒ மொபைல் செயலி மூலம் வாகனத்தை பெறுவதற்கான வழிமுறைகளை செய்து முடிக்க முடியும். 

இந்திய சந்தையில் வெஸ்பா மற்றும் அப்ரிலியா மாடல்கள் பிரீமியம் விலையில் கிடைக்கின்றன. இதனால் குத்தகை முறை பியாஜியோ மட்டுமின்றி வாடிக்கையாளர்களுக்கும் பயன்தரும் என கூறப்படுகிறது.

Similar News