கவாசகி நிறுவனத்தின் புதிய 2021 இசட்900 பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
2021 கவாசகி இசட்900 பிஎஸ்6 வெளியீட்டு விவரம்
பதிவு: செப்டம்பர் 01, 2020 18:24
கவாசகி இசட்900
இந்திய சந்தையில் கவாசகி நிறுவனத்தின் பிரபல மோட்டார்சைக்கிளாக இசட்900 மாடல் இருக்கிறது. எனினும், இந்த மாடல் இதுவரை பிஎஸ்6 அப்டேட் பெறாமல் இருக்கிறது.
தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய 2021 கவாசகி இசட்900 மோட்டார்சைக்கிள் இந்த மாத இறுதியில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. புதிய மோட்டார்சைக்கிளில் மேம்பட்ட எலெக்ட்ரானிக்ஸ் ரைடர் ஏய்டுகள் மற்றும் எல்இடி ஹெட்லேம்ப் வழங்கப்படும் என தெரிகிறது.
முன்னதாக இசட்900 பிஎஸ்6 மாடல் கடந்த ஆண்டு டிசம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போதைய தகவல்களின் படி புதிய கவாசகி இசட்900 பிஎஸ்6 மாடல் விலை ரூ. 8.5 லட்சத்தில் துவங்கி ரூ. 9.0 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது.
புதிய 2021 இசட்900 பிஎஸ்6 மாடலில் 948சிசி இன்-லைன், 4 சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது. பிஎஸ்4 மாடலில் இந்த என்ஜின் 123 பிஹெச்பி பவர், 98.4 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
Related Tags :