ஆட்டோமொபைல்
2020 கவாசகி வல்கன் எஸ் பிஎஸ்6

இந்தியாவில் 2020 கவாசகி வல்கன் எஸ் பிஎஸ்6 அறிமுகம்

Published On 2020-08-29 12:59 IST   |   Update On 2020-08-29 12:59:00 IST
கவாசகி நிறுவனத்தின் 2020 வல்கன் எஸ் பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

கவாசகி நிறுவனம் இந்தியாவில் புதிய 2020 பிஎஸ்6 ரக வல்கன் எஸ் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்து உள்ளது. இந்தியாவில் இதன் விலை ரூ. 5.79 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய பிஎஸ்4 மாடலை விட ரூ. 30 ஆயிரம் அதிகம் ஆகும்.

புதிய வல்கன் எஸ் மாடலில் முந்தைய வெர்ஷனில் இருந்ததை போன்றே ஓவல் வடிவ ஹெட்லேம்ப், ஸ்ப்லிட் சீட் மற்றும் ஸ்வூபிங் ரியர் ஃபென்டர் வழங்கப்பட்டு இருக்கின்றன. எனினும், புதிய மோட்டார்சைக்கிள் மெட்டாலிக் பிளாட் ரா கிரேஸ்டோன் நிறத்தில் கிடைக்கிறது.



ககவாசகி வல்கன் எஸ் மாடலில் 649 சிசி, பேரலெல் ட்வின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் செயல்திறன் விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. முந்தைய பிஎஸ்4 மாடலில் 59.5 பிஹெச்பி பவர், 63 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.

இத்துடன் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஹேன்டிள்பார், தீட், ஃபூட்பெக் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இவற்றை பயனர்கள் அவரவர் சவுகரியத்திற்கு ஏற்றார்போல் வைத்துக் கொள்ள முடியும். சஸ்பென்ஷனிற்கு டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் மற்றும் மோனோஷாக் யூனிட் வழங்கப்பட்டு உள்ளது.

Similar News